9ஆம் வகுப்பை தொடர்ந்து 10ஆம் வகுப்பிலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 2- 9ஆம் வகுப்பு புத் தகத்தை தொடர்ந்து 10ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதற்காக கலைஞர் கருணாநிதியின் சிறப்புகள் என்ற பெயரில் 11 தலைப்பு களில் பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரைக்கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புக ளில் பாடம் கவிதை கலைஞர், கட்டு மான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கலைஞர் சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது.
10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மறைந்த மேனாள் முதல மைச்சரும், திமுகவின் முதுப்பெரும் தலை வருமான கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவித்தது.

கடந்த 2023-2024ஆம் கல்வி யாண்டின் போது தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின்படி உள்ள 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைப் பதற்கு மேனாள் முதலமைச்சர் கலை ஞர் கருணாநிதி மேற்கொண்ட நட வடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க் கப்பட்டன.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் “பன்முகக் கலை ஞர்” என்ற தலைப்பில் மேனாள் முதல மைச்சர் கலைஞர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணி கள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
குழந்தை உள்ளக் கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலை ஞர், கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் முத்த மிழறிஞர் கலைஞர் சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் இடம் பெற்றிருக்கிறது
மேலும், இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று கலைஞர் கருணாநிதியின் கையெழுத் தையும் பதித்துள்ளனர்.
பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதற்காக கலைஞரின் திறமைகளை விளக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *