சிங்கப்பூர், மே 2- கிழக்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுகின்றது. கடந்த வாரம் அதிகபட்சமாக மியான் மரில் 113 டிகிரி (45 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தாய் லாந்து மற்றும் இந்தியாவில் 112 டிகிரி வெயில் பதிவானது.
பங்களாதேஷில் 109 டிகிரியும், லாவோஸ் வியட்நாம் மற்றும் நேபாளில் 108 டிகிரியும் வெப்பம் பதிவானது.
சீனாவில் 107 டிகிரியும், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் 98 டிகிரிக்கு சற்று கூடுதலாகவும் வெப்பம் பதிவானது.
கிழக்காசிய நாடுகள் அனைத் திலும் கடந்த வாரம் கடும் வெப்பம் பதிவான நிலையில் இந்தோ னேசியாவில் அதிகபட்சமாக 91 டிகிரி வெயில் பதிவானது.
வெப்பம் மற்றும் அனல்காற்று காரணமாக மக்கள் பெருமளவு வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக் கும் நிலையில் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெயில்… இந்தியாவில் அதிகபட்சமாக 44 டிகிரி வெப்பம் பதிவு
Leave a comment