வாழப்பாடி, மே 2 – பக்தி, பேராசை காரணமாக வாழப் பாடி அருகே புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறிய மோசடி பேர்வழிகளிடம் ரூ.6 லட்சம் தொகையை பறிகொடுத்த பெண் காவல்துறையில் கொடுத்த புகாரில் மோசடி மந்திரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியுள்ளார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து, மோசடி மந்திரவாதிகள் இருவரை வாழப்பாடி காவல் துறையினர் 29.4.2024 அன்று கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப் பாடி செல்லியம்மன்நகர் பகுதி யில் வசித்து வருபவர் விமலா (வயது50). சின்னமநாயக்கன் பாளையம் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் இவர், திருச்செங்கோட்டை சேர்ந்த ஒருவரின் ஆலோசனையில், கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(வயது 46). என்பவரிடம் ஜோதிடம் பார்ப் பதற்காக அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
இதனை சாதகமாக பயன் படுத்திக்கொண்ட மோசடி மந்திரவாதி சுரேஷ்குமார், அவ ரது உறவினர் சரவணன்(வயது 44) என்பவருடன் சேர்ந்து, உங் களது தோட்டத்தில் விலை மதிப்புமிக்க புதையல் இருப்ப தாக விமலாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய விமலா, மோசடி மந்திரவாதி சுரேஷ் குமார் மற்றும் சரவணன் ஆகி யோரிடம் ரூ.6 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் மோசடி மந்திர வாதிகள் புதையல் எடுத்துக் கொடுக்கவில்லை.
இதனால் ஏமாந்ததை உணர்ந்து விமலா பணத்தை திருப்பி கொடுக்கும் படி பலமுறை கேட்டும் இரு வரும் பணத்தை திருப்பி கொடுக் கவில்லை.
எனவே மோசடி மந்திரவாதி சுரேஷ்குமாரையும் அவரது உற வினர் சரவணனையும், தனது உறவினர்கள் உதவியுடன் ஏத் தாப்பூருக்கு அழைத்துச் சென்ற விமலா, தனது பணத்தை கொடுத்து விட்டுசெல்லுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப் படுகிறது.
இதனையடுத்து, தனது கண வரை விமலா கடத்தி சென்று விட்டதாக மோசடி மந்திரவாதி சுரேஷ்குமாரின் மனைவி சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கு மாறு வாழப்பாடி காவல்துறையினருக்கு, சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட் டார்.
இதனையடுத்து, வாழப்பாடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மோசடி மந் திரவாதி சுரேஷ்குமாரும், அவ ரது உறவினர் சரவணனும் சேர்ந்து, விமலாவிடம் ரூ.6 லட்சம் பணம் பெற்றது தெரிய வந்தது.
இதனையடுத்து, மோசடி மந்திரவாதிகள் சுரேஷ்குமார், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்த வாழப்பாடி காவல் துறையினர் ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.
தோட்டத்தில் புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி, பெண்ணிடம் ரூ.6 லட்சம் பணம் பறித்த மோசடி மந்திரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்ட நிகழ்வு, வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி, பணம் இருக்கும் கும்பலிடம் ஏமாறா மல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என, வாழப் பாடி காவல்துறையினர் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.