திருவரங்கம், மே 2– திருச்சி திருவரங்கத் தில் சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழா, குடிஅரசு நூற் றாண்டு விழா சிறப்பாக நடத் துவதென கலந்துரையாடல் கூட் டத்திற்கு மாவட்ட தலைவர்
ஞா.ஆரோக்கியராஜ் தலைமை யேற் றார்.
திருவரங்க பகுதி தலைவர் சா.கண்ணன், திருச்சி மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ், திருவரங்கப் பகுதி செயலாளர் இரா. முருகன், திருவரங்க நகர துணைத் தலைவர் அண்ணாதுரை, திருவரங்க பகுதி பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் கூட் டம் நடைபெற்றது.
சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழாவும் குடிஅரசு பத்தி ரிகையின் நூற்றாண்டு விழாவும் கொண்டாட பரப்புரை கூட்டங் களை நடத்த தலைமை கழகத்தின் அறிவிப்பிற்கு இணங்க வருகிற 4.5.2024 மாலை ஆறு மணி அள வில் திருவரங்கம் பேருந்து நிலை யம் அருகில் நடத்துவது எனவும், பெரியார் பெருந்தொண்டர் அப் பாசாமி அவர்கள் மறைவிற்கும், பெரியார் பெருந்தொண்டர் திரு வரங்க நகர மேனாள் தலைவரும் பல் மருத்துவர் எஸ். எஸ். முத்து அவர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தும், 4.5.2024 தேதி மாவட் டம் முழுவதும் விளம்பரம் செய்து கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.