2.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்
* ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? மோடியின் ‘அரசியல் குடும்பத்தில்’ அங்கம் வகிப்பது குற்றவாளி களுக்கு ‘பாதுகாப்பு உத்தரவாதமா’? ராகுல் காந்தி சரமாரி கேள்வி
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்யாவிடில், ஹிந்து திருமணங்கள் செல்லாது, உச்ச நீதிமன்றம்.
தி இந்து:
* வரவிருக்கும் தோல்விக்கு பயந்து ‘400′ முழக்கத்தை பாஜக தவிர்க்கிறது என அகிலேஷ் தாக்கு.
* தேர்தல் பேரணியில் பிரதமர் மோடியின் பழைய பேச்சுகள் மறு ஒலிபரப்பு (ரீவைண்ட்) செய்து பிரதமர் போன்ற உயரிய தலைவர் பொது வாழ்வில் இதுபோன்ற பொய்களை பேசக்கூடாது என தேஜஸ்வி கண்டனம்.
* மணிப்பூர் குழுக்கள் இன மோதலின் ஒரு ஆண்டைக் குறிக்கும் நிகழ்வுகளை மே 3ஆம் தேதி நடத்துகின்றன. குகி-ஸோ அமைப்பு சுராசந்த்பூரில் பணி நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “மோடியை வெளியேற்றுவோம்; நாட்டை காப்பாற்றுவோம்” (‘மோடி ஹடாவோ, தேஷ் பச்சாவோ’) என்ற முழக்கத்தோடு, அரசமைப்பு, ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டும் என மல்லி கார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
தி டெலிகிராப்:
* ஏழைகள் மற்றும் அதிகாரம் அற்றவர்களிடம் அய்ந்து கிலோ ரேஷனுக்கு தீர்வு காணச் சொல்வதும், அய்ந்து விமான நிலையங்களை அபகரிக்க கூட்டாளிகளை அனுமதிப்பதும் மற்ற எல்லா வகையான சமத்துவமின்மை யையும் மோடி அரசு மோசமாக்குகிறது என்கிறார் அரசியல் விமர் சகர் பரகலா பிரபாகர்.
* நாடு முழுவதும் விற்கப்படும் குஜராத் மாடல் என்பது ஒரு மாயை; உண்மையல்ல. கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் போன்ற உண்மையான பிரச்சினைகள் குஜராத் மாதிரியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் என்று அழைக்கப்படு வதில் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்கிறார் கவிஞரும், திரைப்படத் தயாரிப்பாளருமான மெகுல் தேவ்கலா
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment