நாகர்கோவில், மே 2- கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட் டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செய லாளர் கோ.வெற்றி வேந்தன் முன் னிலை வகித்து தொடக்கவுரையாற் றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் சிறப்புரை யாற்றினார். கழக காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட தி.க துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், தோழர்கள் புலவர் மோகன்தாசு, அழகனாபுரம் சிதம் பரதாணு ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் நன்றி கூறினார்.
புரட்சிக்கவிஞரின் பெயரன்கள் கோ.செல்வம்,கோ.தென்னவன், குமரி மாவட்ட தோழர் தலைமை யாசிரியர் சு. தா. பெருமாள் ஆகி யோருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டன.
சுயமரியாதை இயக்க நூற் றாண்டு, குடிஅரசு ஏடு நூற்றாண்டு விழாக்களை சிறப்பாக நடத்தி முடிப்பது, மே 7 திட்டுவிளையில் தெருமுனைக்கூட்டம் நடத்துவது, விடுதலை நாளிதழுக்கு குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார் பாக 100 சந்தாக்களை திரட்டி தமிழர் தலைவரிடம் வழங்குவது, குமரிமாவட்ட நீர்நிலைகளை பாது காக்க உடனடியாக தூர்வார நட வடிக்கை எடுக்க குமரிமாவட்ட ஆட்சியரைக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.