பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் நடைபெற்ற அப்டிஸ் ஜெனரல் எனும் ஆங்கில புலமை தேர்வில் தகுதி பெற்ற 52 மாணவர்களை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் 29.04.2024 அன்று நடைபெற்ற நிகழ்வில் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி. இராமச்சந்திரன் பேசுகையில் மாணவர்கள் இதுபோன்ற ஆங்கில புலமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் சிறப்பான இடத்துக்கு சென்றடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர், வணிக மேலாண்மைத்துறைத் தலைவர், துறை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.