தஞ்சை, ஏப்.30- குடிஅரசு, சுய மரியாதை இயக்க நூற் றாண்டு விழா கலந்துரை யாடல் கூட்டம் 27.4.2024 மாலை 6 மணிக்கு அம் மன் பேட்டையில் ஒன் றிய தலைவர் ச.கண்ணன் இல்லத்தில் நடைபெற் றது.
தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில், ஒன்றிய தலைவர் ச. கண் ணன், ஒன்றிய செயலா ளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின் முன்னிலை யில் நடைபெற்றது.
பேரூர் தலைவர் அ.கவுதமன் அனைவரை யும் வரவேற்று உரையாற் றினார். கலந்துரையாடல் கூட்ட நோக்கவுரையாக வழக்குரைஞர் சி.அமர் சிங், திருவையாறு பார்ப் பனர்களின் கோட்டை யாக இருந்ததை நம் சுயமரியாதை வீரர்கள் எவ்வாறெல்லாம் பாடு பட்டு பார்ப்பனர்களுக்கு எதிராக செயல்பட்டு வலிமையாக சுயமரி யாதை இயக்கத்தையும், திருவையாறு பகுதியில் தந்தை பெரியார் சிலை யும் நிறுவி அதனை காத் திட நடந்திட்ட போராட் டங்களையும் எடுத்து ரைத்தும், குறிப்பாக இந்த பகுதி பற்றி ஆசிரி யர் அவர்கள் தனி கவனம் எடுத்து நமது கழகம் முன் போல் வளர்ந்து -செயல் பட வேண்டும் என அறி வுறுத்துவார் எனக் குறி பிட்டார். பெரியார் பெருந்தொண்டர் கோ.தங்கவேல், ஆசிரியர் அவர்களை அழைத்துக் கூட்டம் நடத்தியதையும் எதிரிகள் நடுங்கும் அள விற்கு கழகம் வீரியமுடன் செயல்பட்டதையும் எடுத்துரைத்தார். அடுத்து ஒன்றிய அமைப் பாளர் மு.விவேகவிரும்பி, திருவேதிகுடி தோழர் கி.ரவி ஆகியோர் உரை யாற்றினர். கலந்துரையா டல் கூட்டத் தீர்மானங் களை ஒன்றிய தலைவர் ச. கண்ணன் வாசித்தார்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், கழ கத்தில் மாநில தொழிலா ளரணி தலைவர் உள் ளிட்ட பல பொறுப்புக ளில் திறம்பட செயல் பட்டு கழக வளர்ச்சிக்கு அயராது உழைத்து, தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் இருவ ரின் கட்டளையை மாறா மல் கடைப்பிடிக்கும் சம ரசமில்லா கொள்கையா ளர் நெய்வேலி வெ.ஜெய ராமன் 21.12.2023 மறை வுற்றார். முதுபெரும் பெரியார் பெருந்தொண் டரும் – திருவையாறு பகு தியில் திராவிடர் கழகம் வளர பாடுபட்டவரும், வழுவா கொள்கையாள ரும், கழகத் தோழர்கள் கலந்துரையாடும் இட மாக தனது அலுவல கத்தை தந்துதவிய , வேலு சிட்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தவரும், திரு வையாறு தமிழிசை பெருமன்ற புரவலருமான மு.வடிவேல் 21.03.2024 அன்று மறைவுற்றார். இருவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களின் தொண் டிற்கு வீரவணக்கத்தையும் இக்கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.
தலைமைக் கழக ஆணைக்கு ஏற்ப குடி அரசு, சுயமரியாதை இயக் கம் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டத் தினை திருவையாறு தேர டியில் 6.5.1924 அன்று சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட் டது.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் மதிவதனியை அழைத்து சிறப்பாக கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ஜூன் 16இல் கழகத் தோழர் பாடகர் தாமஸ் அற்புதம் நினைவு நாள் கூட்டமாக கண்டியூரில் தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து ஒன்றிய அளவில் அய்ந்து ஊர்களில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு ஏடு நூற்றாண்டு விழா கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக வழக்குரை ஞர் துரை. ஸ்டாலின் நன்றி கூறிட கலந்துரை யாடல் கூட்டம் ஏழு முப்பது மணி அளவில் நிறைவுற்றது.