ஓமலூர் பஞ்சுக்காளிபட்டியில் இயங்கி வரும் சவுத் இந்தியன் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சு.பிருதிவிராஜனுக்கு தமிழ் நாடு அரசின் சார்பில் சேலம் மாவட்ட அளவில் சிறந்த மெட்ரிக் பள்ளி முதல்வராக தேர்வு செய்து சென்னையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் “இராதா கிருஷ்ணன் விருது” வழங்கி சிறப்பு செய்ததை அறிந்து திராவிடர் கழக காப்பாளர் பழநி. புள்ளையண்ணன் பள்ளிக்கு சென்று முதல்வரைப் பாராட்டி மகிழ்ந்தார்.
காப்பாளர் சிந்தாமணியூர் சி சுப்ரமணியன் ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை புத்தகம் வழங்கி மகிழ்ந்தார். உடன் பள்ளித் தாளாளர் சவுந்தரராசன், கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் சவுந்தரராசன்.