சிறீவில்லிபுத்தூர்,ஏப்.30– கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளித்த சிறீவில்லிபுத்தூர் மக ளிர் நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரத்தை இன்று (30.4.2024) அறிவிக்கிறது. இவ்வ ழக்கில் 2 பேர் விடுதலை செய்யப் பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரி யில் கணிதப் பிரிவில் கடந்த 2018இல் உதவி பேராசிரியை யாக பணியாற்றியவர் நிர்மலா தேவி.
இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வித்துறையில் செல்வாக்கு டன் இருந்தார். இவர், சில மாணவி களிடம் அலைபேசியில் ஆசை வார்த்தைகள் மற்றும் வாக்குறுதி களை கூறி சிலரிடம் ‘அட்ஜஸ்ட் செய்து’ போகுமாறு கூறியுள்ளார்.
இதற்கு பல மாணவிகள் உடன்படவில்லை. அதே நேரம் ஆசை வார்த்தைகளை கூறி மாண விகளை பாலியலுக்கு அழைக்கும் வகையில் பேசிய ஒலிப்பதிவு கடந்த 13.3.2018இல் சமூக வலைத் தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.
இதுதொடர்பாக மாணவி கள் மற்றும் அவர்களது பெற் றோர் அளித்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை காவல் துறையினர், பேராசிரியை நிர் மலாதேவி மீது தகவல் தொழில் நுட்ப சட்டம், குற்றம் செய்ய தூண்டுதல், ஆபாச மாக பேசுதல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தல், மற்றும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமை தடுப்பு சட்டம் உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து 19.3.2018இல் பேராசிரியை நிர்மலாதேவி பணியிடைநீக்கம் செய்யப்பட் டார்.
நிர்மலாதேவியை 16.4.2018இல் அருப்புக்கோட்டை காவல் துறை யினர் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை 17.4.2018இல் சி.பி.சி.அய்.டி.க்கு மாற்றப்பட் டது.
இதனிடையே, 19.4.2018இல் ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதி காரி சந்தானம் தலைமையில், தனி விசாரணைக் குழுவை அமைத்து அப்போதைய ஆளுநர் உத்த ரவிட்டிருந்தார்.
அதே நேரம் வழக்கை தொடர்ந்து விசாரித்த சி.பி.சி.அய்.டி. காவல்துறையி னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய முருகனை ஏப். 24இல் கைது செய்தனர்.
ஏப். 25இல் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சிறீவில்லிபுத்தூர் மகளிர் நீதி மன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் சிபிசிஅய்டி தரப்பில் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. இதையடுத்து கடந்த 26.10.2018இல் சிறீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விசா ரணை துவங்கி நடந்து வந்தது.
11 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் முருகனுக்கும், கருப்ப சாமிக்கும் உயர்நீதிமன் றம் பிணை வழங்கியது.
நிர்மலாதேவிக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பிணை வழங்கப் பட்டது. அனைத்து தரப்பு வாதங் களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் ஏப். 26இல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி டி.பகவதியம்மாள் உத்தரவிட்டிருந் தார்.
அன்றைய தினம் வழக்கு விசார ணைக்கு வந்தபோது கருப்பசாமி, முருகன் ஆகி யோர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
உடல்நிலையைக் காரணம் காட்டி நிர்மலாதேவி நீதிமன்றத் தில் ஆஜராக வில்லை. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பிற்காக நிர்மலா தேவி உள்பட 3 பேரும் 29.4.2024 அன்று ஆஜராக வேண் டும் என நீதிபதி டி.பகவதியம்மாள் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி இந்த வழக்கில் நேற்று (29.4.2024) தீர்ப்பளிக் கப்பட்டது. தீர்ப்புக்காக நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய 3 பேரும் நேற்றுக் காலை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந் தனர்.
அப்போது தீர்ப்பளித்த நீதி பதி டி.பகவதியம்மாள், ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட் டுகள் சந்தேகத் திற்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை. எனவே, இருவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடு விக்கப்படுகின்றனர்.
அதேநேரம் இந்த வழக்கில் நிர்மலாதேவி குற்றவாளி என இந்த நீதிமன்றம் முடிவு செய் துள்ளது.
அவருக்குரிய தண்டனை விப ரம் பிற்பகலில் தெரிவிக்கப்படும்’’ என கூறியிருந்தார்.
இதன்பின் பிற்பகலில் நீதி மன்றம் கூடியது. அப்போது நிர்மலாதேவி தரப்பு வழக் குரைஞர் சுரேஷ் நெப்போ லியன் ஆஜராகி, ‘‘தண்டனையின்மீது வாதிட எங்கள் தரப் புக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘இந்த வழக் கில் தண்டனை விபரம் தொடர் பான உத்தரவு நாளைக்கு (30.4.2024) பிறப்பிக்கப்படும்’’ என கூறி, தீர்ப்பை இன்றைக்கு தள்ளி வைத்தார். இதையடுத்து, நிர்மலா தேவி மதுரை பெண்கள் மத்தியச் சிறைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். தீர்ப்புக்காக இன்று சிறீவில்லி புத்தூர் நீதிமன்றத் தில் மீண்டும் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார்.