நாட்டை பிளவுபடுத்தும் பிரதமர் மோடி இரா.முத்தரசன் சாடல்

2 Min Read

சென்னை,ஏப்.30- இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளதாவது:
மக்களவைக்கான 18ஆவது பொதுத் தேர்தல் இரண்டு கட்டங் கள் முடிந்து விட்டன. அடுத்த மூன்று கட்ட தேர்தல்கள் நடை பெறவுள்ளன.
முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19இல் முடிந்துள்ள நிலையில் அடுத் தடுத்து நடைபெறவுள்ள தேர்தல் களுக்கான பரப்புரையை அனைத்து கட்சிகளும் மேற்கொண்டுள்ளன.

முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக இல்லை என்பதனை நன்கு உணர்ந் துள்ள மோடி தோல்வியை சகித்து கொள்ள இயலாத மனநிலையில், அரசியல் அமைப்பில் தான் வகித்து வரும் மிக உயர்ந்த பொறுப் பான ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் என்பதனை முற்றாக மறந்து, தரம் தாழ்ந்து பேசி வரு கிறார்.
மூன்றாவது முறையாக எப்பாடு பட்டாவது பிரதமர் ஆகி விட வேண்டும் என்கிற பேராசையில், நாட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்று முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பிரதமரின் பரப்புரைக் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது மக்களும், அறிஞர் பெரு மக்களும், ஊடகங்களும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையிலும் பிரதமர் தனது வெறி பிடித்த பரப்புரையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து மேற் கொண்டு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மேற் கொண்டு வருவது தேர்தல் பிரச் சாரம் அல்ல, மாறாக மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி நாட் டையே பிளவுபடுத்தும் தேச விரோதச் செயலாகும்.
ஒன்றுபட்ட இந்தியா மதவெறி யின் காரணமாக இரண்டாகி பின் மூன்றானது. (இந்தியா _- பாகிஸ் தான் – பங்களாதேஷ்) தற்போது மோடி மேற்கொண்டுள்ள பிரச்சா ரம் மேலும் நாட்டை பிளவுப டுத்தும் பேராபத்தை வெளிப் படுத்தி வருகிறது.
பிரதமரின் கண்ணியமற்ற தீய உள்நோக்கம் கொண்ட பரப்புரை குறித்து நடவடிக்கை எடுத்திட வேண்டிய பொறுப்பு வாய்ந்த தேர் தல் ஆணையம் அமைதி காப்பது மிகக் கவலைக்குரியது.
ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற் றும் பாஜக தலைவர்கள், அக்கட் சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலகத்தை தூண்டி வரு கின்றனர்.

எங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் இல்லையெனில் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருவதை பிரதமரின் பரப்புரைகள் உறுதி செய்கின்றன.
அரசமைப்பச் சட்டத்தின் அடிப் படை பண்பான மதச் சார்பின்மை, ஜனநாயகம் அனைத்தையும் சவக் குழிக்கு அனுப்பும் பிரதமரின் சிறு மைத்தனமான செயலை நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கி ணைந்து முறியடித்து நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் மாபெரும் வெற்றி பெறுவார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு உறுதியாக நம்புகிறது.
-இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *