பா. பார்த்திபன் – சு. கெஜலட்சுமி ஆகியோரின் மணவிழாவினை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்
பெரம்பூர் பகுதி தலைவர் மங்களபுரம் கே. பாஸ்கர் – பா. ரமணி இணையரின் மகன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பா. பார்த்திபன், மறைந்த எஸ். சுப்பிரமணியன் – எஸ். வனிதா இணையரின் மகள் சு. கெஜலட்சுமி ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு மணவிழாவினைத் தலைமை வகித்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, வழக்குரைஞர் சு. குமாரதேவன், தொழிலதிபர் டி. சுரேஷ் (ஆந்திரா), தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், காப்பாளர் கி. இராமலிங்கம் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் (பெரம்பூர், 28.4.2024)