மருத்துவ இதழியல் படிப்பு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை,ஏப்.29- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத் தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முது நிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு ஏப்.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்பானது ஓராண்டு காலம் பயிற்றுவிக்கப்படுகிறது.
மொத்தம் 8 இடங்கள் உள்ள அந்தப் படிப்பில் சேர ஏதேனும் ஓர் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இதழியல் துறையில் அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அந்தப் படிப்பின் கீழ், மொத்தம் 3 தாள்களுக்கான தேர்வு முறை உள்ளது.

அவற்றில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச் சத்து குறைபாடு கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப் பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் www.tnmgrmu.ac.in இணையதள முக வரியிலோ, epidtnmgrmu.ac.inஎனும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்தப் படிப்பில் நாள்தோறும் வகுப்புகள் கிடையாது. மாறாக, இணையவழி வகுப்புகள் வாரம் ஒரு முறையும், நேரடி வகுப்புகள் மாதம் ஒரு முறையும் நடத்தப்படும்.
முதுநிலை மருத்துவ இதழியல் படிப்புக்கான ஓராண்டு கல்வி கட் டணம் ரூ. 7,000. தேர்வுக் கட்டணங்கள் இதில் அடங்காது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *