29.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இரண்டு கட்ட தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடையும் என்பதால், பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையில், மக்களிடையே பயத்தை உருவாக்க முயல்கிறார், என காங்கிரஸ் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆர்.எஸ்.எஸ். – பாஜக, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்; மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தையே அழிப்பார்கள் என ராகுல் குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அசாமின் கரீம்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் பாஜக வேட்பாளருக்கு வாக்கு இயந்திரத்தில் அய்ந்து முறை வாக்களித்ததாக கூறப்படும் காட்சிப்பதிவு ஒன்று பரவியதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இட ஒதுக்கீட்டை ரத்து செய்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் திட்டமிட்டுள்ளதாகவும், மனுவாத சித்தாந்தத்தை அமல்படுத்துவதன் மூலம் பாஜக நாட்டின் சமூக கட்டமைப்பை ஒழிக்க முயற்சிப்பதாகவும் தெலங்கானா முதலமைச்சர்ரேவந்த் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* இந்திய அன்னையின் மகள் என்ற முறையில், சர்வாதிகாரத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, டில்லியில் தேர்தல் பரப்புரை.
* 400 இடம்’ முழக்கத்தால் மக்கள் மனநிலையை தவறாக புரிந்து கொண்ட பாஜக, மூன்றாம் கட்ட தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறாது; மக்களவைத் தேர்தல் அரசியல் சாசனத்தை ஒழிக்க விரும்புவோருக்கும், அரசியல் சாசனத்தை பாதுகாக்க விரும்பும் இந்திய அணிக்கும் இடையே நடக்கும் போராட்டம்; என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் பேச்சு.
– குடந்தை கருணா