சென்னை, ஏப். 29 – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயி லில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரத்தில், நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு விசார ணையை சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் தொடங்கி உள்ளனர்.
நயினார் நாகேந்திரன் மீது வழக்கு
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோத னைகள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப் பட்ட நெல்லை எக்ஸ் பிரஸ் ரயிலில் உரிய ஆவ ணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.
இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட் டனர். தாம்பரம் காவல் துறையினர் நடத்திய விசாரணை யில் அவர்கள், தமிழ் நாடு பா.ஜனதா துணைத் தலைவரும், நெல்லை தொகுதி வேட் பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்த மான சென்னை புரசை வாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
இந்த பணத்தை நயி னார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்பேரில் நயினார் நாகேந்திரன் மீது தாம்ப ரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜ ராகி விளக்கம் அளிக்குமாறு அழைப் பாணை அனுப்பினார்கள். ஆனால் நயினார் நாகேந் திரன் விசாரணைக்கு ஆஜ ராகவில்லை. 10 நாட்கள் அவகாசம் கேட்டார். இதைத் தொடர்ந்து மே 2ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அவ ருக்கு மீண்டும் அழைப் பாணை அனுப்பப் பட்டது.
சி.பி.சி.அய்.டி. விசாரணை
இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் விசாரணைக்கு மாற்றம் செய்து காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் கடந்த 26ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தங்கள் வசம் உள்ள இந்த வழக்கு தொடர் பான ஆவணங்களை சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் வசம் தாம் பரம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு ஆவ ணங்களை சி.பி.சி.அய்.டி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நயினா ர் நாகேந்திரனுக்கு சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் தனியாக அழைப் பாணை அனுப்பி அவரி டம் விரைவில் விசா ரணை நடத்த உள்ளனர்.