சென்னை,ஏப்.29 – இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
மோடி தலைமையிலான பா.ஜ.க. ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டுக ளாக தமிழ்நாட்டையும், மக்களை யும் வஞ்சித்து வருகின்றது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாநில அரசின் வருவாய் ஆதாரங் களை வெட்டிக் குறைத்தது. இழப் பீட்டு நிதி மேலும் சில ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்ற கோரிக் கையை நிராகரித்தது. நீட் நுழைவுத் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க மறுத்து வருவது – ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல் படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது, அவ சர காலத் தேவைக்கு மாநில அரசு கடன் வாங்க அனுமதி மறுப்பது என்று தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசு, தமிழ் நாடு இயற்கை பேரிடர் தாக்கு தலால் பேரிழப்பை சந்தித்து, மக்க ளின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்த நேரத்தில் கரம் நீட்டி உதவாமல் உதாசீனப்படுத்தி, அவ தூறு பரப்பி அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செலில் ஈடுபட் டதை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள்.
மிக் ஜாம் புயலும், பெருமழையும் தாக்குதல் நடத்தியது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையிலும் மோடியின் பாஜக ஒன்றிய அரசு இரக்கம் காட்ட முன் வரவில்லை.
ரூ. 37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் கால சேதாரங்களை சீர் படுத்த தேவை என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியம் செய்த நிலையில் தமிழ்நாடு அரசு உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
உச்ச நீதிமன்றம் தலையிடும் சூழலில் ஒன்றிய அரசு மிக, மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழ் நாட்டையும், மக்களையும் அவம திக்கும் செயலாகும். பாஜக ஒன்றிய அரசின் பாரபட்சம் காட்டி, பழி வாங்கும் செயலை இந்தியக் கம் யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது. -இவ்வாறு இரா.முததரசன் அறிக்கையில் குறிப்பிட்டுளளார்.