யோகா குரு பாபா ராவ்தேவ் தெரிந்தே ஏமாற்று முகமாக விளம்பரம் செய்து இலாபம் அடைந்தவர். செய்தது தெரிந்தே செய்த குற்றமாகும். சண்டிகார் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களில் தெரிந்தே தவறு செய்து தேர்வு முடிவை தன் விருப்பப்படி அறிவித்தார். பின்னர் இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்றம் விசாரணை செய்து முடித்தாலும் தண்டனை என்ற வகையில் மன்னிப்பு என்பது சரியான தீர்வாகாது – எல்லா குற்றவாளிகளும் தவறுக்கு தண்டனையாக மன்னிப்புக் கோரினால் குற்றம் பெருகுமே தவிர குறையாது.
பெற்ற இலாபத்தில் பாதியை மருத்துவ சங்கத்திற்கு வழங்குவதோடு அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்க வேண்டும்.
மேயர் தேர்தலில் தெரிந்தே தவறு செய்தவரை உடனே பதவி நீக்கி வீட்டுக்கு அனுப்புவதற்குப் பதில் தண்டனை வழங்கிட வேண்டும்.
பொன். இளங்கோவன்,
சென்னை – 82