பெ. கலைவாணன்
மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்,
திருப்பத்தூர்
இந்து மதத்தை பின்பற்றுவர்களின் (மூட)நம்பிக்கை குடும்பத்தில் வறுமை இல்லாத வாழ்வும், ஆடை, ஆபரணங்கள், செல்வங்கள் அதிகரிக்கவும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் செய்வார்கள்.
அப்படி ஆடை, அணிகலன்கள், சொத்துக்கள் சேர்வதற்கு லட்சுமி குபேரரை வழிபடுவது நன்மை களைத் தரும். வியாழக்கிழமை தோறும் லக்ஷ்மி குபேர வழிபாடு செய்து வருபவர்களுக்கு ஆடை, அணிகலன்கள் குறைவில்லாமல் சேரும் என்பது நியதி.
மகாலட்சுமி வாசம் செய்யும் நெல்லிக்காயில் குபேர பகவானின் அருள் இருக்கிறது. எனவே லட்சுமி குபேர படத்தை வைத்து, நெல்லிக்கனி நைவேத்தியம் படைத்து, நாணயங்களையும் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த உழைத்த பணத்தில் இருந்து ஒரு சிறு தொகையையும் வைத்து மனதார வழிபாடு செய்து வந்தால் மென்மேலும் ஆடை, அணிகலன்கள், சொத்துக்கள் பெருகும் என்பது இந்துகளின்( மூட)நம்பிக்கை.
இந்த மூட நம்பிக்கையை மோடி மக்களிடையே வேறு விதமாக விதைத்து மக்களுடைய பணத்தை சுருட்டி தன் பணக்கார நண்பர்களுக்கு கொடுக்கிறார்.
ஏழை மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கை ஆரம்பிக்க சொன்னார். ஆரம்பிக்கும் போது உங்கள் வங்கி கணக்கில் சமையல் எரிவாயு மானியம் முதற்கொண்டு, அனைத்து மானியங்கள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுவோம் என்றார். அதுமட்டுமா? வெளிநாட்டு கருப்பு பணங்களை எல்லாம் மீட்டு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 இலட்சம் செலுத்துவேன் என்றார்.
இதை நம்பி தான் நம்ம மக்கள் எல்லாம் குபேர பகவானுக்கு நெல்லிக்கனி நெய்வேத்தியம் படைத் தது போல கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்த பணம் ரூ.1000த்தை செலுத்தி வங்கி கணக்கை ஆரம் பித்தார்கள்.
சிறிது காலம் பொறுத்து மோடி மானியம், 15 லட்சம் என்று சொன்னாரே ஏதாவது கணக்கில் வந்துள்ளதா ? என்று பார்த்தால் கணக்கு ஆரம்பிக்க போட்ட ஆயிரம் ரூபா யையே காணவில்லை.
நாங்கள் செலுத்திய பணம் என்ன அய்யா ஆச்சு.. என்று கேட்டால் மினிமம் பேலன்ஸ் பிடித்தம் என்று அந்த பணத்தை களவாடி உள்ளது மோடி அரசாங்கம். இப்படி ஏழை மக்களிடம் வங்கி கணக்கை துவங்க செய்து அதில் பணத்தை போட வைத்து பேலன்ஸ் இல்லை என்று அபராதம் விதித்து மேலும் சர்வீஸ் சார்ஜ் என்று ஏழை மக்களிடம் பிடித்த மொத்த தொகை மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி என்கிறது புள்ளி விபரங்கள்.
இந்த வகையில் ஏழைகளிடம் கொள்ளை அடித்த பணத்தை எல்லாம் சேர்த்து அதானி – அம்பானி உள்ளபட அதி உயர் பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளது.
இப்படி அதி உயர் பணக்காரர்களின் சொத் துக்களை முறையாக கணக்கை சமர்ப்பிக்க செய்து அவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்த பணத்தை தினமும் 100 ரூபாய், 200 ரூபாய் என்று தன் வியர்வை சிந்தி உழைக்கும் மக்களுக்கு கொடுத்தால் என்ன தப்பு?
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணங்களை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று மோடி சொன்னது என்னாச்சு?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகும் இந்தியா கூட்டணி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உண்மை பேசினால், அதை திரித்து இந்துக்களின் சொத்துக்களை பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள். இந்து பெண்களின் தாலியையெல்லாம் பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள். என்று இரு மதத்தினரிடையே வெறுப்பை, மோதலை உருவாக்கி அதன் மூலம் ஒன்றியத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நயவஞ்சக நாடகம் ஆடுகிறார் இந்த மோடி.
இதே போன்று தான் காந்தி யாரை பார்த்து அன்று சொன்னார்கள். இவர் ஒவ்வொரு சலுகையாக ஆரம் பித்து அனைத்து சலுகைகளையும், வளங்களையும் முஸ்லிம்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறார் என்று.
ஏழை தாயின் மகன் ( ? ) நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் பணக்காரர்கள் கையில் சிக்கியிருக்கும் சொத்துக்கள் விவரம் என்ன தெரியுமா?
1% அதி உயர் பணக்காரர்களிடம் – 33 % வளங்கள், 2 – 10 % பணக்காரர்களிடம் – 31.6 % வளங்கள், 10 – 50% நடுத்தர வர்க்கத்திடம்- 29.5 வளங்கள், 51 – 100 % அடித்தட்டு மக்களிடம்-5.9% வளங்கள் மட்டுமே.
மொத்த செல்வங்கள் எங்கே குவிந்துள்ளது என்று தெரிகிறதா?
இந்து மக்களின் நம்பிக்கையின் பேரில் பார்த்தாலும் குபேர கடவுளும் ஏழைகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் மோடி அவர்களும் ஏழைகளை அறவே கண்டு கொள்ளவில்லை. பணம் படைத்தவன் மேலும் பெரும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழையாக தான் மாறிக் கொண்டிருக்கிறான்.
ஆசிரியர் குறிப்பிடுவது போல நாளொன்றுக்கு 1000 கோடி ரூபாய் சம்பாதித்தவர்கள் அந்தப் பெருமுதலாளிகள் – அதற்கான பாதை போட்டு கொள்ளையடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தியது எந்தக் கட்சி ஆட்சிக் காலத்தில்? அதானிக்கும் – அம்பானிக்கும் மட்டுமே வாரி வழங்கும் குபேரானாக திகழும் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான்.
மேலும், பிரதமர் மோடி குறித்து ஆசிரியர் குறிப்பிடுவது,
ஒரு சிறு உண்மைகூட கலப்பில்லாமல், அந்தந்தப் பகுதி மக்களின் மதவெறி, ஜாதிவெறி, புரியாமை, அறியாமையை மனதிற்கொண்டு, அதற்கேற்ப தனது பொய்யுரைகளை அடைப்பொழிவாகப் பேசுகிறார் என்கிறார்.
தினமும் 5 உயர் தர ஆடைகள் ஆபரணங்கள் என்று அணிந்து கொண்டு பேஷன் ஷோ காட்டும் மோடி அவர்களுக்கு இந்தியா கூட்டணி வென்ற வுடன் என்ன ஆடை?
அவர் அணியும் ஆடைக்கு கொடுக்கின்ற பணம் யாருடைய பணம்? அவர் ஊதியத்தில் வாங்கியதா? அவர் வருவாயில் வாங்க முடியுமா? என்று வட மாநிலங்களிலும் மக்கள் கேள்விகள் கேட்க துவங்கி உள்ளார்கள். மதத்தை வைத்துக் கொண்டு எத்தனை காலம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்?
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்ட நூற்றாண்டில் இருக்கின்றோம்.
இக் காலத்திலும் இது போன்ற பொய்யர்களையும், மத வெறியர்களையும், பிற்போக்கு வாதிகளையும் பார்க்கும்போது சுயமரியாதைக்காரனின் பணிகள் திராவிடர் கழகத்தின் பணிகள் மேன் மேலும் அதிகமாக தேவைபடுகிறது.
அதை உணர்ந்துதான் ஆசிரியர் நம்மை சுழல வைத்துக் கொண்டேயிருக்கிறார். நாமும் ஆசிரிய ருடன் சுழன்று கொண்டேயிருப்போம். கடைசி மனிதன் சுய மரியாதைக்காரன் ஆகும் வரை..
கடவுளை மற!
மனிதனை நினை! என்று சொன்ன
தந்தை பெரியாரை நினை!
சுயமரியாதை இயக்கம் கண்ட
தந்தை பெரியாருக்கு நன்றிகள்!
அதை தொடர்ந்து வீறு நடைபோடச் செய்யும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றிகள்!