பரப்புரைக் கூட்டங்களில் பேசுவோரின் முக்கிய கவனத்திற்கு…!
பரப்புரைக் கூட்டங்களை நமது இயக்க பொறுப்பாளர்கள், ஒத்தக் கருத்துள்ள மற்ற கட்சியினர், அமைப்புத் தோழர்களுடன் ஒருங்கிணைத்து நடத்துவது – பெருமளவில் பயனளிக்கும்.
தந்தை பெரியாரின் சிறு நூலான
‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?”
ஆசிரியர் கி.வீரமணி எழுதிய,
‘‘சுயமரியாதை இயக்கம் ஓர் அமைதிப் புரட்சியே!”
என்ற தலைப்பிட்ட நூல்களில் உள்ள தகவல்களை மய்யமாகக் கொண்டு,
சமத்துவம், ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை ஒழிப்பு, கல்வி, உத்தியோகத்தில் சமத்துவ, சமவாய்ப்பு, சமூகநீதியின்மூலம் வளர்ந்துள்ள அமைப்புப்பற்றி, கண்ணியமான சொற்களுடன் பேச்சு அமைதல் முக்கியம்!
– தலைமை நிலையம்