சென்னை, ஏப்.28 “தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பு களுக்கான நிவாரணமாக தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக் கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவார ணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், ஒன்றிய பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மொத்தம் ரூ.276 கோடியை ஒன்றிய அரசு நேற்று (27.4.2024) விடுவித்தது. தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடி நிதியளித்த அதேநேரம், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கருநாடக அரசுக்கு ரூ.3454 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது. நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தமிழ்£ட்டிற்கு வழங்கப் பட்ட நிதியையும், கருநாடகாவுக்கு வழங்கப்பட்ட நிதியையும் வைத்து ஒன்றிய அரசு மீது தமிழ்நாட்டில் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலை யில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது, “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரண மாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்பு களை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!'”
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.3454 கோடி நிதி
இதேபோல் கருநாடக அரசும் வறட்சி நிவாரணம் கோரி வந்தது. கருநாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடி நிதியை விடுவித்துள்ளது. கருநாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் வறட்சி நிவாரண நிதி வழங்காமல் ஒன்றிய அரசு கர்நாடகாவை வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி வருகிறது.
26.4.2024 அன்று கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தேர் தல் நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு மே 7இ-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி வறட்சி நிவாரண நிதி, ஜிஎஸ்டி நிதிப் பங்கீடு விவகாரங்களை முன் வைத்துப் பேசினார். பாஜக கருநாடகா வுக்கு காலி சொம்பை தருவதாகக் கூறினார். பாரதிய சொம்புக் கட்சி என்று காங்கிரஸ் தொடர்ந்து பாஜ கவை விமர்சித்து வருகிறது. இந் நிலையில் கருநாடக அரசுக்கு ரூ.3,454 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது.