சென்னை,ஏப்.28- வெள்ள நிவாரண நிதி யாக தமிழ்நாடு அரசு கோரியதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்கி யுள்ளதோ யானை பசிக்கு சோளப்பொரி மாதிரி என தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.
தி.மு. கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய பா.ஜ.க. அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியது, யானை பசிக்கு சோளப்பொரி மாதிரி இருந்தது. நாங்கள் கேட்ட தொகைக்கு 5இல் ஒரு பாகம் கூட கொடுக்க வில்லை. தமிழ் நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணம் கேட் டார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்று முறையிட்டனர்.
பா.ஜ.க.வுக்கு தோல்வி பயம்!
100ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் புயல் வெள்ள பாதிப்பு ஏற் பட்டது என்று எல்லா தரப்பிலும் ஒப்புக் கொள் ளப்பட்ட ஒன்றாகும். அப்படி இருக்கும்போது இதுவரை கொடுத்த நிதி யைவிட கூடுதலாக கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் சொற்ப தொகையை வழங்கி இருக்கிறார்கள். பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கு நிவாரண நிதி ஒதுக் கீட்டில் மோடி அரசு வஞ்சனைசெய்கிறது.
வட மாநிலத்தில் அவ ருக்கு எதிர்ப்பு எழுந்துள் ளது. இதை தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன் படுத்த தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கி உள்ளோம் என் பார். எவ்வளவு தொகை ஒதுக்கினார் என்பதை சொல்லமாட்டார். கேட் டது எவ்வளவு? கொடுத் தது எவ்வளவு? என்பதை எல்லாம் விரிவாக சொல்லமாட்டார்.
மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்ட கார ணத்தால் தமிழ்நாட் டிற்கு வெள்ள நிவா ரணம் கொடுத்ததாக பிரசாரம் செய்வார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இவர் செய்த துரோகத்துக்கு ஏற்க னவே 19ஆம் தேதி தீர்ப்பு அளித்து விட்டார்கள். அந்த தீர்ப்பு ஜூன் 4-ஆம் தேதி வாசிக்கப்படும். ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகி றது. தமிழ்நாடு அரசு கேட்கும் தொகை அப்போது கிடைக்கும்.
-இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.