சென்னை,ஏப்.28 – அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் மூலம் விளையாட் டுத் துறையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளில் மாநில, மாவட்ட அளவிலான சேர்க்கைக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன.
முதன்மை நிலை விளையாட்டு மய்யம்: இதன்படி, முதன்மை நிலை விளையாட்டு மய்யத்தில் இருபாலருக் கான தடகளம், குத்துச்சண்டை, மேசைப் பந்து, டேக்வாண்டோ மற்றும் ஆண்களுக்கான பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்பும் 6 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திலும், இருபாலருக்கான இறகுப்பந்து, வில்வித்தை உள் ளிட்ட பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் சென்னை நேரு பூங்கா விளையாட்டரங் கத்திலும், ஜிம்னாஸ்டிக், நீச்சல் ஆகிய பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் வேளச்சேரி நீச்சல் குள வளாகத்திலும், டென்னிஸ் பிரிவில் சேர விரும்புபவர் கள் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளை யாட்டரங்கிலும், சைக்கிளிங் பிரிவில் சேர விரும்புபவர்கள் செங்கல்பட்டு, மேலகோட்டையூர் தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்திலும் மே 7ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெ றும் மாநில அளவிலான தேர்வில் கலந்துகொள்ளலாம்.
விளையாட்டு விடுதி (மாவட்ட அளவில்): இதேபோல, இந்த விளை யாட்டு விடுதியில் இருபாலருக்கான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கபடி, கையுந்துபந்து உள்ளிட்ட பிரிவுகளிலும், ஆண்களுக்கான கிரிக் கெட் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பிரிவு களிலும் சேர விரும்பும் 7, 8, 9, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் (ஆண்கள்) தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மே 10ஆம் தேதி காலை 7 மணி முதல் நடைபெறும் தேர்விலும், பெண்கள் மே 11ஆம் தேதி காலை 7 மணிமுதல் நடைபெறும் தேர்விலும் கலந்துகொள்ளலாம்.
இதில், மாவட்ட அளவிலான தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். இதன் கூடுதல் விவ ரத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் பார்வையிடலாம்.
விளையாட்டு விடுதி (மாநில அளவில்): இந்த விளையாட்டு விடுதியில் இருபாலருக்கான குத்துச்சண்டை, வாள் விளையாட்டு, ஜூடோ, பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளிலும், ஆண்களுக் கான ஸ்குவாஷ் பிரிவிலும் சேர விரும் பும் 7, 8, 9, 11ஆம் வகுப்பு மாணவர்கள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளை யாட்டரங்கத்திலும், ஆண்களுக்கான டேக்வாண்டோ பிரிவில் சேர விரும்பு பவர்கள் கடலூர் மாவட்ட விளை யாட்டரங்கத்திலும், ஆண்களுக்கான மல்லக்கம்பம் பிரிவில் சேர விரும்புப வர்கள் விழுப்புரம் மாவட்ட விளை யாட்டரங்கத்திலும், ஆண்களுக்கான மல்யுத்தம் மற்றும் வூஷூ பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் திருச்சி விளையாட்டரங்கத்திலும் மே 13ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் தேர் வில் ஆண்களும், மே 14ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் தேர்வில் பெண்களும் கலந்துகொள்ளலாம்.
சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கானது): இருபாலருக் கான தடகளம், குத்துச்சண்டை, கபடி, பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மே 6ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் தேர்விலும், இருபாலருக்கான கூடைப் பந்து, கைப்பந்து, கால்பந்து மற்றும் ஆண்களுக்கான வாள்விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்புப வர்கள் சென்னை நேரு உள்விளை யாட்டரங்கத்தில் மே 6ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் தேர்வி லும், இருபாலருக்கான ஆக்கி பிரிவில் சேர விரும்புபவர்கள் சென்னை எம்ஆர்கே ஆக்கி விளையாட்டரங்கில் மே 6 காலை 7 மணிக்கு நடைபெறும் தேர்விலும், பெண்களுக்கான நீச்சல் பிரிவில் சேர விரும்புபவர்கள் வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் மே 6 காலை 7 மணிக்கு நடைபெறும் மாநில அளவிலான தேர்விலும் கலந்து கொள் ளலாம்.
இந்த விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in எனும் இணை யதள முகவரிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம்.
கடைசி நாள்: இதில், சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விண் ணப்பிப்பவர்கள் மே 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளும், முதன்மை நிலை விளையாட்டு மய்யத்தில் சேர விரும்புபவர்கள் மே 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளும், விளையாட்டு விடுதியில் சேர விரும்புபவர்கள் மே 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளும் விண் ணப்பங்களை பூர்த்தி செய்து இணைய தளத்தில் பதிவேற்றலாம். இணைய வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மய்யத்தின் 95140 00777 எனும் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.