சென்னை, செப். 13- சென்னையில் செப்.16-ஆம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாதவரத்திலுள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர் வால் அகர்சன் கல்லூரியில் செப்.16-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 15,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங் களுக்கு தகுதியானவர்களை தேர்ந் தெடுக்கவுள்ளன. இதனால், 8 -ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், பட்டயப்படிப்பு படித்தவர்கள், அய்.டி.அய். தொழிற் கல்வி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்துத் தரப்பிலுள்ள தகுதியுள்ள நபர்கள் இம்முகாமில் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மய்யத் தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்க ளும் வழங்கப்படவுள்ளன. இத னால் தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு சென்னையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை, நேரிலோ அல்லது 044-24615160 என்ற எண்ணிலோ, அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.