நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும் பிஜேபியை வீழ்த்துவதாக அமைய வேண்டும்!
ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!
சென்னை,செப்.13- நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும் பிஜேபியை வீழ்த்துவதாக அமைய வேண்டும்! ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன! மக்கள் தயாராகிவிட்டனர் – தலைவர்கள் தயாராகிவிட்டனர் – நாடும் தயாராகி விட்டது என்று சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சூளுரைத்தார்!
“ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன? ” சிறப்புக் கூட்டம் நேற்று (12.09.2023) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
“ஸநாதனத்தால் என்ன பலன்?”
நேற்று (12.09.2023) காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுவில் திரா விடர் கழக இளைஞர்கள் பெருமளவில் தங்களது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நாடகப் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் என்றும், நமது கொள்கைகளை நாடக வடிவில் மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தினையும் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்தார். கழகத் தலை வரின் சொல்லுக்கு உடனடியாக செயல் வடிவம் கொடுத்து, மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் “ஸநாதனம் வாங்கலியோ?” என்ற தலைப்பில் எளிய முறையில், ஆழமான கருபொதிந்த நாடகத்தைத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் எழுதி, தலைமையேற்று, குழுவினரோடு சேர்ந்து நடித்தார். நாடகத்தில் உடுமலை வடிவேல், வை.கலையரசன், மு.பவானி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் பங்கேற்றனர்.
ஒன்றிய பிஜேபி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!
நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார் அவரது உரையில்;
தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியால் ஏற்படும் அனைத்து நிலை வளர்ச்சியையும், இந்தியாவில் வலுவான ஒரு அணியை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சரின் பங்கினையும் எடுத்துரைத்து, இந்தியா கூட்டணி ஏற்படும்போது அதனை ஒன்று சேரவிடாமல் தடுக்க நினைத்து, தற்போது கூட்டணியை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு பிஜேபி அரசு எப்படி எல்லாம் செயல்படுகிறது என்பதை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, ஸநாதனத்தின் தொடக்கப் புள்ளி தொடங்கி அதனைப் பற்றிய அவர்கள் பின்பற்றும் இந்துத்துவவாதிகளின் கருத்தினை எல்லாம் எடுத் துரைத்து இன்றைய வரை ஸநாதனம் எந்த வடிவில் இருக்கிறது என்றும், ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு வரலாற்று ஆய்வுரையை நிகழ்த்தினார். மேலும் பிஜேபி திசை திருப்பும் நோக்கில் செய்யும் இந்த ஸநாதன பிரச்சாரத்திற்கு இனிமேல் நாம் பதில் சொல்ல வேண்டாம் என்றும், நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளு மன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சி யாக இருக்கும் பிஜேபியை வீழ்த்துவதாக அமைய வேண்டும் என்றும், பிஜேபியின் நாட்கள் எண் ணப்படு கின்றது என்றும், மக்கள் தயாராகி விட்டார்கள்; தலைவர்கள் தயாராகிவிட்டனர்; நாடு தயாராகிவிட்டது இவர்கள் வீழ்த்தப்பட வேண்டும், தொடர் பிரச்சாரங் களை முன்னெடுப்போம் என்று நிறைவு செய்தார்.
சங்ககாலம் தொடங்கி பாரதியார் கவிதைகள் வரை ஸநாதனம் என்ற சொல் எங்கும் இல்லை!
அதற்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரை ஆற்றினார். அவரது உரையில்,
தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான தீர்மானங்களை வருகை தந்த அனைவர் முன்னிலையிலும் முன்மொழிந்தார். குறிப்பாக தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது பெற்ற கழகத் தலை வருக்கு பாராட்டு, விருதினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடத்து தல், மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதய நிதி அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய சாமியார்களுக்குக் கண்டனம், அக்டோபர் 6 தஞ்சையில் நடைபெற இருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழா, விஸ்வகர்மா யோஜனா எதிர்ப்பு போன்ற தீர்மானங்கள் வருகை தந்த தோழர்களிடம் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸின் பிரச்சாரகராக ஆளுநர் எப்படி செயல்படுகிறார் என்பதற்கான உதாரணம்தான் ஸநாதனத்தை பற்றி அவர் பேசும் கருத்துகள் என்பதை ஆதா ரத்தோடு விளக்கி, ஸநாதனம் என்பது வடமொழி சொல் என்றும், தமிழில் அதை புரியும்படி சொல் என்ற கேள்வியை கேட்டால், யாரிடமாவது பதில் இருக்கிறதா என்ற கேள்வியோடு தனது உரையை தொடங்கினார்.
மேலும், சங்க கால இலக்கியம் தொடங்கி பாரதி யார் வரை ஏதா வது ஒரு நூலில் ஸனா தனம் என்ற சொல் இருக் கிறதா என்ற தொல்லியல் அறி ஞர் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதி காரி பாலகிருஷ் ணன் அவர்களின் நியாயம் பொருந்திய கேள்வியினைப் பதிவு செய்தார். கடந்த செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் “ஸநாதன ஒழிப்பு மாநாடு” என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விவரித்து, ஸநாதன ஒழிப்பு என்பது இன்றைக்கு தொடங்கப்பட்டது அல்ல, 100 ஆண்டுகளாக இந்தப் பணியை, இந்த பிரச்சாரத்தை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்றும், அதனை அன்றைக்கு அமைச்சர் உதயநிதி சொல்லி இருக்கிறார் அந்தக் கருத்தில் தவறு என்று தோன்றினால், கருத்தியல் ரீதியாக தான் பதில் சொல்ல வேண்டுமே ஒழிய, வன்முறை எப்படி பதிலாகும்? என்றார்.
இந்த வன்முறை பேச்சுகளுக்கு பெயர்தான் ஸனா தனம் என்றும், வன்முறை மூலமாக பார்ப்பனர் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி விடலாம் என்று நினைக் கிறார்கள் என்றார். ஸநாதன தர்மம் பற்றி பார்ப்பனர் களின் எண்ணம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருந்தது என்பதை விவரித்தார். குறிப்பாக காந்தியார் ‘அரிஜன ஆலய பிரவேசம்’ என்பதற்காக தமிழ்நாடு வந்த போது, பார்ப்பனர்கள் கருப்புக்கொடி காட்டியதை எடுத்துரைத்தார். நிறைவாக குன்னூரில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் ஸநாதனம் பற்றி சொன்ன கருத்தினை எடுத்துரைத்து, பிஜேபி தன்னுடைய சிஏஜி ஊழலை திசை திருப்ப, மக்கள் கேட்கும் கேள்விக்கு எதிர்த்துப் பேச முடியாத சூழலில் குறுக்கு வழியில் ஸநாதனம் என்பதை கையில் எடுத்துள்ளது என்றும், அதற்கு மக்களிடத்தில் இருக்கும் பக்தி போதையை பயன்படுத்துகிறது இதுதான் ஸநாதனத்தை அவர்கள் தூக்கி பிடிக்கும் ரகசியம் என்றார். ஆனால், ஒவ்வொரு முறை ஸனாதனிகள் இப்படி செயல்படுகிற போது தேர்தலில் எப்படிப்பட்ட தோல்விகளை சந்தித்து இருக் கிறார்கள் என்பதை 1971 தேர்தலோடு ஒப்பிட்டு விளக் கினார். 2024 தேர்தலில் பிஜேபி படுதோல்வியை சந்திக்கும் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
பிஜேபியின் ரூ.7.5 லட்சம் கோடிக்கு மேலான ஊழலை மறைக்கவே ஸநாதனத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள்!
நிகழ்ச்சியில் கழகத்தின் பொதுச்செய லாளர் முனை வர் துரை.சந்திர சேகரன் அவர் கள் சிறப்புரை ஆற்றினார்.
இந்திய துணைக் கண் டத்தில் ஸநாதன எதிர்ப்புப் போராளியாக விளங்குபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்று கூறி தனது உரையை தொடங்கினார். ஸநாதனம் என்றால் இதுதான் என்று எந்த வரையறையையும் ஸநாதனிகளுக்குச் சொல்லத் தெரியாது என்றும், ராஜாஜி அவர்கள் இந்துக்களுக்கு ஆபத்து வருகிறபோது ராமாயணத்தை தூக்கிப் பிடியுங்கள் என்றார். அந்த வகையில் இப்போது அவர்களுக்கு ஆபத்து வரும்போது, ஸநாதனத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றார்.
ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் வருகிறபோது அதை திசைதிருப்ப ஸநாதனத்தை எப்படி கையாள் கிறார்கள் என்பதை விவரித்தார். குறிப்பாக மண்டல் கமிஷனை நடைமுறைப்படுத்தும் வேலையில் ராமஜென்ம பூமி என்று அவர்கள் ஆரம்பித்ததை எடுத்துரைத்து, தற்போது வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல், அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஆகிய வற்றை மனதில் வைத்தும், I.N.D.I.A. கூட்டணி வலிமை யாக இருப்பதை உணர்ந்தும், ஊழலை மறைப் பதற்காகவும், மக்கள் அவர்களின் ஊழலை பற்றி பேசி விடக் கூடாது என்பதற்காகவும் ஸநாதனத்தை கையில் எடுக்கிறார்கள் என்றார்.
கலைஞரின் பேரனின் தலைக்கு…
இருந்தபோதிலும் கலைஞரின் தலையின் விலையை விட, அவரின் பேரனின் தலைக்கு அதிக விலை என்பது பெருமைதான் என்றார். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி தனி மனிதர் அல்ல ,அவருக்கு பின் இலட் சக்கணக்கான தமிழர்கள், இளைஞர்கள், மான உணர்ச்சி உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றார்.
தொடர்ந்து மத்திய தணிக்கை வாரியம் சிஏஜி பிஜேபியின் ஊழலை பட்டியலிட்டதை ஒவ்வொரு ஊழலாக மிகத் தெளிவாக விளக்கினார். குறிப்பாக, சுங்கச்சாவடி ஊழல், சாலை அமைப்பதற்காக ஏற்படுத் திய ஊழல், இறந்தவர்களுக்கு காப்பீடு, முதியோர், கைம்பெண், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் ஓய்வூதியத்தில் ஊழல் என்று இதுவரை நடந்த ஊழலில் பிஜேபி செய்த ஊழல் தான் மிக அதிகம் என்றார். உத்தமர்கள் போல் காட்சி அளித்து இவ்வளவு மோசடி களை செய்திருக்க கூடியவர்கள் பிஜேபியினர் என்றார்.
சமர் செய்யும் இயக்கம்
ஒவ்வொரு முறையும் இந்தியாவின் மிக முக்கிய பிரச்சினைகளை நாம் கேள்வி கேட்கின்றபோது அதனை எப்படியெல்லாம் திசை திருப்புகிறார்கள் என்று விளக்கமாக பட்டியலிட்டார். இப்படியாக மக் களுக்கு எதிராக இருக்கும் அரசை நாம் அப்புறப் படுத்தப்பட வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வி யோடு, ஸநாதனம் என்ற கட்டுக்குள் இருக்கும் அனைத் திற்கும் எதிராக சமர் செய்யும் இயக்கம் நமது இயக்கம் என்றும், ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்ற இடத் திற்கு நம்மை அழைத்துச் செல்லும் இயக்கம் இது என்றார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி படுதோல்வியை சந்திக்க வேண்டும் என்றும், மக்கள் மரண அடியை கொடுப்பார்கள் அந்த பணியினை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் முடிப்போம் என்று நிறைவு செய்தார்.
இடிந்து விழும் நிலையில் உள்ள
பிஜேபி கட்டடம்!
நிகழ்வில் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை யாற்றினார்.
அவரது உரையில்,
பிஜேபி என்ற கட்டடம் மிக மோசமான நிலையில் உள்ள தால், அது கூடிய விரைவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது என்றார். எந்தவித ஆவணமும் இல்லாமல், கணக்கும் இல்லாமல் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி என்று பல சைபர்களை பக்கத்தில் போட்டு ஒரு தேர்தலையே சந்தித்தவர்கள் பிஜேபியினர் என்றும், ஆனால் இன்றைக்கு அவர்கள் செய்திருக்கக் கூடிய ஊழல் எவ்வளவு பெரியது என்பதை விவரித்தார். மோடி வித்தை என்பது செத்த வருக்கு வைத்தியம் பார்க்கும் வித்தை என்றார்.
மேலும் அன்றைய தினம் வெளியான ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பூனே பதிப்பில், இந்திய கால்பந்து அணி யின் ஆலோசகராக ‘பூபேஷ் சர்மா’ என்ற ஒரு சாமியாரை நியமித்து, 17 வயதுக்கு கீழ் ஆசிய கோப்பை யில் பங்கேற்க இருந்த விளையாட்டு வீரர்களின் பெயர் களையும், ராசியையும் அந்த சாமியாரிடம் கொடுத்து, ராசியின் அடிப்படையில் அவர் தேர்ந் தெடுத்த வீரர்கள் விளையாடச் சென்று, நன்கு விளையாடக் கூடியவர் களை நீக்கி ராசி பார்த்து விளையாட்டு வீரர்களை அனுப்பியதன் விளைவாக இந்தியா படுதோல்வியை சந்தித்து இருக்கிறது என்றும், இந்த வேலைக்காக அந்த சாமியாருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் 12 முதல் 15 லட்சம் என்ற செய்தியை பதிவு செய்தார். வேறு ஏதாவது ஒரு நாட்டில் இப்படி நடக்குமா என்ற கேள்வியை எழுப்பினார்.
மேலும் NDTV சேனலை அதானி வாங்கி இருக்கிறார் என்றும், அதில் ராகுல் காந்தியை பேட்டி எடுக்கின்ற போது பேட்டி எடுக்கும் நெறியாளரை விவாதத்தை சீர்குலையுங்கள் என்று தொடர்ந்து மேல் இடத்திலிருந்து அவருக்கு வந்த வற்புறுத்தலைத் தொடர்ந்து அவர் தமது பதவியிலிருந்து விலகியதையும் பதிவு செய்தார்.
மதவெறியைத் தூண்டும்
இன்றைக்கு உலகம் முழுக்க அவர்களின் செயல்கள், ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்றும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் எந்தவித பெரிய முன்னேற்றமும் வட மாநில மக்களிடம் இல்லை, அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி எந்தவித புரிதலும் இன்றி இருக்கும் மக்களுக்கு இஸ்லாமியர்கள் எல்லாம் நமக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி , அவர்கள் நம்மை கொன்று விடுவார்கள் என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றார்.
80 சதவீதம் மக்களை பயமுறுத்தி அதன் மூலம் மத வெறியை தூண் டும் கட்சியாக பிஜேபி இருக் கிறது என்பதை விவரித்தார். எந்த காலத்திலும் அமைதியை விரும்பாத இவர்கள் கொடுங்கோலர்கள். இந்தக் கொடுங் கோலர்களிட மிருந்து நாட்டை காப்பாற்ற அமைக்கப்பட்ட I.N.D.I.A. கூட்டணியில் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் பங்கு அதிகம் இருக்கிறது என்றார்.
ஸநாதனத்தை ஒழித்தவர்கள்தான்
அதிகம்!
இன்றைக்கு பிரச்சாரக் கருவியாக ஸநாதனத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இங்கு பல காலத்திற்கு முன்பே ஸநாதனத்தை ஒழித்தவர்கள் தான் அதிகம் என்றும், குறிப்பாக குழந்தை திருமணத்தை நடத்தி வைக்காமல் இருப்பவர்கள் ஸநாதனத்தை ஒழித்தவர்கள் தான்; கணவன் இறந்தவுடன் மொட்டை அடிக்காமல் அந்தப் பெண்ணை படிக்க வைத்தவர்கள் ஸநாதனத்தை ஒழித்தவர்கள்தான்; தேவதாசி முறையை ஒழித்தவர்கள் ஸநாதனத்தை ஒழித்தவர்கள்தான். எனவே, ஸநாதனத்தை ஒழித்தவர்கள்தான் இந்த மண்ணில் அதிகம் என்றும், இந்த கூட்டம் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்க வேண்டும் இந்தியா கூட்டணி யின் முழுமையான திட்டத்தை ஆசிரியர் எதிர்பார்த்து இருந்தார். இன்றைக்கு திராவிடம் இந்தியா முழுவதும் சென்று இருக்கிறது ஆசிரியரின் எண்ணத்தை ஈடேற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி முழுவதுமாக துடைதெறியப்பட வேண்டும் என்று நிறைவு செய்தார்.
நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் வழக் குரைஞர் சே.மெ.மதிவதனி இணைப்புரையாற்றினார். வருகை தந்த அனைவருக்கும் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நன்றி கூறினார்.