புதுடில்லி,செப்.13— இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 624.7 பில்லி யன் டாலராக (சுமார் ரூ.51.92 லட்சம் கோடி) உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஒன்றிய நிதிய மைச்சகம் சார்பில் ‘இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நிலவர அறிக்கை 2022-2023’ வெளியிடப் பட்டது. அந்த அறிக்கையின் முன் னுரையில் ஒன்றிய அமைச்சர் நிர் மலா சீதாராமன் தெரிவித்துள்ள தாவது:
கடந்த மார்ச் மாத இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 624.7 பில்லியன் டாலராக இருந் தது. அத்துடன் கடனை திருப்பி அளிக்க வேண்டிய பணத் தேவை யின் விகிதமும் 5.3 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் இறுதி யில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் 20 சதவீதமாக இருந்தது. இது இந்த ஆண்டு மார்ச் இறுதியில், 18.9 சதவீதமாக குறைந்தது.
மொத்த வெளிநாட்டுக் கட னில் நீண்ட கால கடனின் பங்கு 79.4 சதவீதமாகவும், குறுகிய கால கடனின் பங்கு 20.6 சதவீதமாகவும் உள்ளது. பெரும்பாலான குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகை யில், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நிலை சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் இறுதியு டன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 5.6 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.46,550 கோடி) அதிகமாக உள்ளது என்று இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நிலவர அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.