சென்னை, ஏப். 27- பள்ளிகளில் குழந்தை களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப் பது, முட்டிப்போட வைப்பது, கிள்ளுவது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்குவதை தடை செய்யும் வகையில், தேசிய குழந் தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகள் அமல்படுத்தப் படுவதை உறுதி செய்யக்கோரி உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காமாட்சி சங்கர் ஆறுமுகம் என் பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பாக விசார ணைக்கு வந்தது. அப்போது, குழந் தைகளின் உரிமைகளை பாதுகாப் பதற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும், பள்ளிகளில் தண்டனை வழங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள தாகவும் தமிழ்நாடு அரசுத் தரப் பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது,
குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவது என்பது அவர்களை எந்த விதத்திலும் நல்வழிப்படுத் தாது. மாறாக குழந்தைகள் பாது காப்பான சூழலில் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இடம் கொடுக் காமல், அவர்களும் தங்களது கருத் துகளை சுதந்திரமாக தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். குழந்தை களை கண்காணிக்க வேண்டுமே யன்றி அவர்களிடம் அடக்கு முறையை கையாளக் கூடாது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதி களை அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்துவது என்பது முக்கிய மானது. எனவே, இதுதொடர்பான விதிகளை அனைத்து பள்ளிகளுக் கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். அத்துடன் குழந் தைகளுக்கு தண்டனை வழங்கு வதை தடுக்கும் இந்த விதிகளை கண்டிப்பாக தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண் டும்
இவ்வாறு நீதிபதி பள்ளிக்கல் வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், விதிகளை மீறி குழந் தைகளுக்கு தண்டனை வழங்கப் பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விதிகள் அமல்படுத்தப்படுவதை கண் காணிக்க அனைத்துப் பள்ளிகளி லும், தலைமை ஆசிரியர், பெற் றோர், ஆசிரியர், மூத்த மாணவர் கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவையும் அமைக்க வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி யம் அறிவுறுத்தியுள்ளார்.