கல்வி உரிமை சட்டத்தின்படி 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட வேண்டும்

1 Min Read

சென்னை முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

சென்னை,ஏப்.27- அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8ஆ-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர் களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட் டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:

நடப்பு (2023-2024) கல்வி ஆண் டில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி, ஆதிதிரா விடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9ஆ-ம் வகுப்பு களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவ தில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசி ரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும். அதன்படி, 6, 7ஆம் வகுப்புக ளுக்கு தொடர் மற்றும் முழுமை யான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3ஆம் பருவ தேர்வுக்குரிய மதிப் பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்ய வேண்டும்.

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும். மாணவர்களின் இடைநிற் றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாம லும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ஆம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக் கப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8ஆ-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர் களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *