திருச்சி, ஏப்.27- சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு (வயது 58). அம்பத்தூர் விஜயலட்சுமி புரத்தை சேர்ந்தவர் ரவி (47). இவர்கள் மற்றும் சென் னையைச் சேர்ந்த பாலமுருகன் (44), மதன்குமார் (42) ஆகிய 4 பேர் நேற்று (26-4-2024) காலையில் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் மதியம் 3.30 மணியளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சா லையில் மணிகண்டத்தை அடுத்த பாத்திமா நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பாலக்கட்டையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கணேஷ் பாபு, ரவி ஆகி யோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலமுருகன், மதன்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
திருச்செந்தூர் முருகன் காப்பாற்றவில்லை! பக்தர்கள் இரண்டு பேர் பலி
Leave a Comment