முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, செப்.13 தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு – அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ‘மேக்சி விஷன்’ குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரூபாய் 400 கோடி முதலீட்டில் 2000 நபர்களுக் கான புதிய வேலைவாய்ப்பளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேக்சி விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை குழுமத்தால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தற்போதைய தி.மு.க. தலைமையிலான அரசு மாநிலத்தில் அதிக தொழில் முத லீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக் கைகளை செய்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட் டில் தொழிலகங்களை துவங்குவ தற்கான அனைத்து வித உதவிகள் மற்றும் அரசுத் தரப்புப் பணிகளும் விரைவாக செய்வதற்கான உறு தியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது தெலுங்கானா, குஜராத், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளைக் கொண்ட மேக்சி விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி குழுமம், தற்போது தமிழ்நாட்டில் புதிய கண் சிகிச்சை மய்யங்களை துவங்க உள்ளது.
அதன்படி ரூபாய் 400 கோடி முதலீட்டில் 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலாக தமிழ்நாட்டின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் 100 கண் சிகிச்சை மய்யங்கள் அமைக்க முதல்வரின் தலைமையில் அரசுடன் ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி யில் தமிழ்நாட்டின் முக்கிய அமைச் சர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில் வர்த்தக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.