தோல்வி பயம்தான்!
மகன்: தமிழனின் ஓட்டுரிமை வீண்; முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்? என்று தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: தோல்வி பயத்தின் தாக்குதல், மகனே!
***
மறந்துவிட்டாரா, பிரதமர் மோடி!
மகன்: ஓட்டுச் சீட்டு முறைக்கு மாற முடியாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்தியா கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: தேர்தல் பத்திரம் ஊழலைப்பற்றி உச்சநீதிமன்றம் கூறியது; அதை வசதியாக மறந்துவிட்டாரா, பிரதமர் மோடி, மகனே!