சூரிய ஒளியின் கீழ் நாம் நிற்கும் போது நம் நிழல் காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் நீண்டு இருக்கும். சூரியன் ஓர் ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் நண்பகலில் (12:00 – 00:00 மணி) செங்குத்தாக பூமியின் மீது விழும். அப்போது நம் நிழல் நீளாமல் காலடியின் கீழ் விழும். அதாவது நிழல் விழுவது தெரியாது. இந்நாளை அறிவியல் அறிஞர்கள் ஒருங்கிணைந்து நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ய நாள் எனக்குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்வு பூமியின் 23.5 பாகை அச்சு சாய்வால் ஆண்டில் இரண்டு முறை நடக்கிறது. இந்தாண்டு ஏப்ரல் 25, இரண்டாவது முறையாக ஆக. 18இல் நிகழ்கிறது.