முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமாம் ஆந்திராவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

விசாகப்பட்டினம், ஏப்.26 “ராணுவத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த, காங்கிரஸ் ரகசிய முயற்சி மேற்கொள்கிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டி யுள்ளார்.

ஆந்திராவின் விசாகப்பட்டினத் தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் 24.4.2024 அன்று பிரச்சாரம் செய் தார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, 2006இல் ஆயுதப் படைகளில் மத அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை பரிந்துரைத்தது. இது காங்கிரசின் தற்போதைய தேர்தல் அறிக்கையில் எதிரொலிப்பது கவலையளிக்கிறது. சிறுபான்மையினருக்கு இடஒதுக் கீட்டை அறிமுகப்படுத்தி, ராணுவத்திலும் இந்த யோசனையை விரிவுப் படுத்தினால், அது நாட்டின் ஒற் றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல.

அய்க்கிய முற்போக்குக் கூட் டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் ஓ.பி.சி.,களுக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீதத்துக்குள், முஸ்லிம்களுக்கு 6 சதவீதமும், பிற சிறுபான்மையின ருக்கு 2 சதவீதமும் பரிந்துரைத்தது. காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள், நம் சமூகத்தை பிளவுபடுத்துவதாக உள்ளது.
இது, மத அடிப்படையில், பின் வாசல் வழியாக நாட்டை பிளவு படுத்த மேற்கொள்ளும் ரகசிய முயற்சியாகும். இவ்வாறு அவர் பேசினார்.
ரத்து செய்யப்படும்’

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவை தொகுதியில் போட்டி யிடும் பா.ஜ., வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து, நேற்று (25.4.2024) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: சமீபத்தில் தான் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இங்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் பாதுகாக் கும் என, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடந்த மாதம் தெரிவித் திருந்தார். ஆனால், அவர் தெலங் கானாவை டில்லியின் ஏ.டி.எம்.,மாக மாற்றியுள்ளார். ஆந்திராவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அதனை எஸ்.சி., – எஸ்.டி., – பி.சி., உள்ளிட்ட பிரிவினருக்கு பகிர்ந்து அளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *