திராவிட மாணவர் கழகம் கண்டனம்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 17.11.2023 அன்று “தீபோத்சவ் – 2023” என்ற பெயரில் பல்கலைக்கழக வளாகத்திலேயே தீபாவளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
அதில் பார்ப்பனர்களை அழைத்து யாகம் நடத்தப் பட்டு இருக்கிறது. மேலும் “ஜெய் சிறீ ராம்” என்று கோல அலங்காரமும், முழக்கமும் எழுப்பப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற அரசின் கல்வி நிறுவனத்தில் மதம் சார்ந்த நிகழ்வுகள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மாணவர்கள் இணைந்து தாங்களாகவே விழாக்களைக் கொண்டாடுவது என்பது சில இடங்களில் நடந்தாலும், அதில் அண்மைக் காலத்தில் மதவெறிக் கூச்சலாக ஒலிக்கும் ‘ஜெய் சிறீராம்’ என்ற முழக்கத்தை எழுப்பியிருப்பதும், வரைந்திருப்பதும்,
அந்த யாகத்தில் பல்கலைக் கழகத் துணை வேந்தரே கலந்துக் கொண்டு இருக்கிறார் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது; வன்மையான கண்டனத் திற்குரியது.
பல்கலைக் கழகத்தில் உள்ள மற்ற மாணவர் அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலை யில், மதவாத பிஜேபி- யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் தந்தை பெரியாரைக் குறித்து இழி சொற்களால் எழுதியிருப்பதும், “இந்த நிலமெங்கும் இருளைப் பரப்பியவர்” என்றும் குறிப்பிட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றியத்தில் மதவாத பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதல் அனைத்து ஒன்றிய அரசு நிறுவனங்கள் என் பவை அரசின் நிறுவனமா? அல்லது ஆர்எஸ்எஸ்-ன் கூடாரமா? என்று கேட்கும் அளவிற்கு மாற்றப்பட் டுள்ளன. அரசமைப்பு கூறுகிற மதச்சார்பின்மையை அடியோடு சிதைத்து, மாணவர்களை மதம், ஜாதி என பிரிக்கின்ற வேலையினை ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் பிரிவுகளும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் மதம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டதையும், அதில் பல்கலைக்கழகத் துணைவேந்தரே கலந்து கொண் டதையும், அதையொட்டி ஏபிவிபி என்னும் மதவெறி நஞ்சை விதைக்கும் அமைப்பு தந்தை பெரியார் குறித்து இழிவாக எழுதியுள்ளதையும் திராவிட மாணவர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இனி இத் தகைய நிகழ்வுகள் நடக்காது என்பதற்கும் உறுதியளிக்க வேண்டும்.
தந்தை பெரியாரை இழிவாகச் சித்தரித்துள்ள ஏபிவிபி குண்டர்கள் மீது தமிழ்நாடு அரசு தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
– இரா.செந்தூர்பாண்டியன்
மாநில செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்