சென்னை, ஏப்.25- பகுத்தறிவாளர் கழகமும் – பூமி, நிலா சுழற்சி, பெயர்ச் சிப் பேரவையும் இணைந்து நடத் திய “உலகப் புவி நாள்” சிறப்பு நிகழ்ச்சிகள் அன்னை மணியம்மை யார் அரங்கில் 21.4.2024 அன்று காலை முதல் மாலை வரை நடந் தேறியது.
பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் வரவேற் புரை நிகழ்த்தினார். திராவிடர் கழகப் பொரு ளாளர் வீ.குமரேசன் தலைமை ஏற்க, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
நோக்க உரையும், தொகுப்புரை யும் செ.செந்தமிழ்ச்செல்வன் வழங் கினார். அறிவியல் திரையிடல் நிகழ்வை உடுமலை வடிவேலும், அறிவியல் இன்னிசை நிகழ்வை வழக்குரைஞர் சு.குமாரதேவனும் முன்னின்று நடத்தித் தந்தனர்.
தொடர்ந்து கவியரங்கம், கருத்தரங்கம், பூமியைப் போற்றி திரு மணம் புரிந்த இணையர்களுக்கு வேண்மாள் நன்னன் பாராட்டிச் சிறப்பித்தார்.
வானியல் கலை நிகழ்ச்சி களையும், தொலைநோக்கி நிகழ்ச் சிகளையும், வடசென்னை அறிவியல் இயக்க உறுப்பினர்கள் மற் றும் பொறியாளர் தேன்மொழிச் செல்வி ஒருங்கிணைப்பில் செவ் வனே நடத்தித் தந்தனர்.
நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பகுத் தறிவாளர் கழக பொதுச் செய லாளர் ஆ.வெங்கடேசன் நன்றி யுரை வழங்கினார்.