சென்னை, ஏப்.25- செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், போட்டித் தேர்வுகளில் பங்கேற்போ ருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணை யில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களை வழங்க உத்தரவிட வேண் டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங் கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து பதிலளிக்க ஒன்றிய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆ-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் மூலம் தற் போது எளிதாக மொழியாக்கம் செய்ய லாம். இந்த மொழியாக்கம் நூறு சத வீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருக்கிறது. அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம். எனவே, இதுதொடர் பாக நேர்மறையாக ஒன்றிய அரசு பரிசீ லிக்க வேண்டும், என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.