கல்லக்குறிச்சி, ஏப்.25- கண்கள், புதுவை மாநிலம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்கும், உடல், தமிழ்நாடு கல்லக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொடையாக வழங்கப் பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பாக கல்லக்குறிச்சி வருவாய் கோட் டாட்சியர் திரு.ளு.லூர்துசாமி , சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.உதயசூரியன் அவர்களும் நேரில் வந்து பெரியசாமி அவர்களின் உடலுக்கு மலர்வளை யம் வைத்து மரியாதை செய்தனர்.
கல்லக்குறிச்சி மாவட்ட கழக அமைப்பாளர் த.பெரியசாமி உடல் நலக்குறைவால் 20.04.2024 இரவு 11 மணியளவில் மறைவுற்றார். அவருக்கு வயது 85. அவர் மறை வுற்ற செய்தி அலைபேசி; முகநூல்; கட்புலனம்; ஆகிய ஊடகங்கள் வாயிலாக கழகத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவ ருக்கும் தெரிவிக்கப்பட்டது.
செய்தியறிந்ததும் காலை 10 மணி அளவில் மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ் கர், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் புலவர் பெ.சயராமன், உளுந்தூர்பேட்டை மருத்துவர் மா.அன்புமணி, உளுந்தூர் பேட்டை ஒன்றிய கழகத் தலைவர் செல்வசக்திவேல், சவுந்திரவள்ளி பாளையம் வழக்குரைஞர் கே.நாராயணசாமி; அண்ணா அறிவுமணி உள்பட பலர் நேரில் வந்து, பெரியசாமி உடலுக்கு மாலைகள் சார்த்தி மரியாதை செய்தார்கள்.
செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் த.பெரியசாமி அவர்களின் மறை வுக்கு வேதனை தெரிவித்து, அவரு டைய வாழ்விணையர் முத்தலம்மாள், மகன்கள் கவுதமன்; எழி லரசன்; பெரியார்செல்வன்; தம்பி துரை ஆகியோருக்கு ஆறுதலை கூறியும் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார். தமிழர் தலைவர் அனுப் பிய இரங்கல் செய்தி அனைவர் முன்னிலையிலும் படிக்கப்பட்டது.
இரங்கல் கூட்டம்.
பிற்பகல் 1.30 மணியளவில் த.பெரியசாமி அவர்களுக்குப் புக ழஞ்சலி, இரங்கல் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக காப்பாளர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். மாநில கழக மருத்துவரணி செயலாளர் கோ.சா.குமார், மாவட்ட செயலாளர் ச.சுந்தரராசன், மாவட்ட துணைத் தலைவர் குழ.செல்வராசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் மாவட்டக் காப்பாளர் ஆர்.பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டு இரங்கலுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து எடுத்த வாய்நத்தம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் பெ.கோவிந்த ராசு; சக்கரபாணி ஆசிரியர்(ஓய்வு), என்.ராமசாமி –பைத்தந்துறை, மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் க.முத்து, மாவட்ட கழக இளைஞர ணித் தலைவர் அ.கரிகாலன்; செயலாளர் கே.முத்துவேல், சங்க ராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் பெ.பாலசண்முகம், ரிஷிவந்தியம் ஒன்றிய கழகத் தலைவர் அர.சண் முகம், மாவட்ட ஓய்வூதியர் சங்க செயலாளர் பொன்.அறிவழகன்; பொருளாளர் முத்தமிழ் முத்தன், மூங்கில்துறைப்பட்டு நகர கழகத் தலைவர் நூ.சலீம், கல்லைத் தமிழ்ச் சங்க தலைவர் செ.வ.புகழேந்தி, சங்கராபுரம் நகர திருக்குறள் பேரவை செயலாளரும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணியின் மாநிலத் தலைவருமான ஆ.இலட்சுமிபதி, வான்மதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மு.சின்னதுரை, கல்லை நகரத் தலைவர் ரா.முத்துசாமி; நா.பெரியார், மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் வீர.முருகேசன் ; அமைப்பாளர் சி.முருகன், பெ.ஜெகதீசன் (உதவிக் கல்வி அலுவலர் ஓய்வு), கஸ்தூரி இளையாழ்வார் (ஆசிரியர்- ஓய்வு) ஆ.பழனிமுத்து (மேலூர் கிளைக் கழக தலைவர்), ராமன் ஆசிரியர் உள்பட பலர் இரங்கலுரை ஆற்றினார்கள்.
பெரியசாமி அய்யாவினுடைய இறுதி நிகழ்சியில் கழக பொதுக் குழு உறுப்பினர் தி.பாலன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அரங்க.பரணிதரன், திருக்கோவி லூர் ஒன்றிய கழக தலைவர் கறுப்புச்சட்டை ஆறுமுகம், வட கரை தாழனூர் கிளைக்கழகத் தலைவர் மு.சேகர், சங்கராபுரம் நகர கழக தலைவர் கலைஅன்பரசு, கல்லை தமிழ்சங்க செயலாளர் தமிழ்ச் செம்மல் செ.வ.மதிவாணன், க.அம்பலம், சி.சாமிதுரை, அருணா சாமிதுரை, மாத்தூர் கிளைக்கழகத் தலைவர் அ.ச.துரைராஜ், மூரார் பாளையம் கிளைக்கழகத் தலைவர் இரா.செல்வமணி உள்பட பல தோழர்கள் வந்திருந்து பெரியசாமி அவர்களுக்கு மரியாதை செய்தனர்.