வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா கார ணாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த பெரியார் பெருந் தொண்டர் சுயமரி யாதைச் சுடரொளி செ.ப.தருமன் பச்சையப்பன் 28.4.2010 இல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை வழங்கப் பட்டது.
தையற் கலைஞராகவும் , தமிழ்நாடு வேளாண்மை துறையில் அறிமுகப்படுத்தும் நவீன விவசாய முறைகளை பின்பற்றும் விவசாயியாகவும் தான் வாழும் கிராமத் திலுள்ள மக்களுக்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்து காட்டினார். தினந்தோறும் மாணவர்களிடத்திலும், தனது தையல் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடத்திலும், விவசாயம் செய்வதற்கு வரும் பணியாளர்களிடத்திலும், தேநீர் கடை மற்றும் பொது இடங்களிலும் தந்தை பெரியாரின் கொள்கைககளை நாள்தோறும் பரப்புரை செய்வதை தன் அன்றாட கடமையாக வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார். தான் வசித்து வந்த கிராமத்தில் தேநீர் கடையில் நிலவி வவந்த இரட்டை குவளை முறையினை 1950 ஆம் ஆண்டில் தன்னுடைய நண்பர்களின் ஒத்துழைப்புடன் ஒழித்தார். இயக்கத்தின் அறிவிப்பின் படி 1979 இல் வேலூரில் நடைபெற்ற மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தோழர்களுடன் கைதாகி வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டார். தன் வாழ்நாள் முழுவதும் பெரியாரின் தொண்டராக வாழ்ந்தார்.
அவரது 14 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது பாதையில் சுயமரியாதை வாழ்க்கையில் பயணிக்கும் வாழ்விணையர் சி.பேபிதருமன், மகன்கள் தரும.வீரமணி, (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), த.பாலாஜி கணேசன், ப.க., மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் மூலமாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கப்பட்டது.