கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

2 Min Read

கடலூர், ஏப். 25- கடலூர் அருகே அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
கடலூர் அருகே குள்ளஞ்சாவடி அம்பலவாணன்பேட்டை யில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அண்ணல் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை உள்ளது. 23.4.2024 அன்று இரவு 12 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர், அம்பேத்கர் சிலை அருகில் வந்து நின்றனர். பின்னர் அவர்கள், மறைத்து வைத்து எடுத்து வந்த பெட் ரோல் குண்டை எடுத்து, அம்பேத்கர் சிலையை உடைக்கும் நோக்கத்தில், சிலையை நோக்கி வீசினர்.

அந்த பெட்ரோல் குண்டு. அம்பேத்கர் சிலையை உரசிய படி சென்று, பழைய ஊராட்சி அலுவ லகத்தின் மீது விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அந்தபகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.

ஊரையே கொளுத்துவோம் என்று மிரட்டல்

உடனே 4பேரும் ஆபாசமாக திட்டி உங்கள் ஊரையே கொளுத்திவிடுவோம் என்று கூறி, மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் புறப் பட்டனர். அந்த பகுதி மக்கள், விரட்டிச் சென்றும், 4 பேரையும் பிடிக்க முடியவில்லை.
அதற்குள் 4 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இது பற்றி குள்ளஞ்சாவடி காவல் நிலை யத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து, பெட்ரோல்குண்டை வீசிச் சென்றது யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே கிரா மத்தில் உள்ள பிள்ளையார். கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமரன் மகன் விஜயராஜ் (வயது 22), கோவிந்தசாமி மகன் கிருஷ்ணகுமார் (21).பழனிவேல் மகன் சதீஷ்குமார் (29). காரகாடு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வெற்றி வேல் (21) ஆகிய 4 பேரும் பெட்ரோல்குண்டை வீசியது தெரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அம்பேத்(47) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

வி.சி.க.வினர் போராட்டம்

இதற்கிடையில் கடலூர் மாநக ராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம் பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *