கும்பகோணம், ஏப்.25- தேரோட் டத்தின்போது 5 அடி ஆழ பள் ளத்தில் தேர் சிக்கியதால் 3 மணி நேரம் ‘தேரோட்டம் தடைப்பட் டது. கிரேன். பொக்லைன் எந்திரத் தின் உதவியுடன் மீட்கப்பட்ட பின்னர் மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டது.
கும்பகோணம் சாரங்க பாணி கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் (23.4.2024) நடந்தது. காலை 5 மணிக்கு கடவுளர் தேரில் இழுத்து புறப்பட்டனர். தொடர்ந்து காலை 7.05 மணிக்கு தேரை பக்தர்கள் சாரங்கா…. கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப் பியபடி தேரை வடம் பிடித்தனர். தேரை 2 பொக் லின் எந்திரங்கள் முன்னோக்கி தள்ளியது.
தேர் புறப்பட்டசிலநிமிடத் தில் உச்சி பிள்ளையார் கோவில் அருகே சென்ற போது சாலையில் சிறிது உள் வாங்கியதால் தேர் நகர சிரமப்பட்டது. இதனால் மேலும் ஒரு பொக்லின் எந்திரம் வரவழைக் கப்பட்டு தேரை தள்ளினர். உடனே தேர் அந்த இடத்தில் இருந்து நகன்றது.
தொடர்ந்து காலை 10 மணிக்கு சாரங்கபாணி தெற்கு வீதியில் ராமசாமி கோவில் அருகே வந்த போது தேரின் முன்பக்க இடது புற சக்கரம் சுமார் 5 அடி ஆழ பள்ளத்தில் சிக்கியது.
தேர் திடீரென பள்ளத்தில் சிக்கியதால் உடனடியாக தேரை மீட்கும் பணிதொடங் கியது. கிரேன் மற்றும் பொக் லைன் உதவி கொண்டு தேரின் சக்கரத்தை இரும்பு கம்பிகளால் தூக்கி பிடித் தனர். தேருக்கு அடியில் ஜாக்கி உத வியுடன் தேர் தூக்கப்பட்டு ஒன்றன் மேல் ஒன்றாக முட் டுக்கட்டைகள் அடுக்கப்பட் டது. இந்த பணியில் கோவில் பணியா ளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பின்னர் டிராக்டரில் கொண்டு வரப்பட்ட மணல் மற்றும் ஜல்லிக் கற்களை பள் ளத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றப்பட்டது. மணல், கற்கள் கொட்டி இறுகியவுடன் அதன்மீது இரும்பு பலகை போடப்பட்டது. தொடர்ந்து நண்பகல் 12.50 மணிக்கு தேரை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
தேர் பள்ளத்தில் சிக்கியதால் 3 மணி நேரம் தேரோட்டம் தடைப்பட்டது. கிரேன். பொக் லைன் எந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டதும் மீண்டும் தேர் வடம் பிடிக்கப் பட்டது.
தேரோட்டம் தடைப்பட்ட தால்தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மனவே தனை அடைந்தனர். 3 மணி நேரம் கழித்து தொடர்ந்து தேர் வடம் பிடிக்க இயலாமல் அவர்கள் நிம்மதி இழந்தனர்.