இந்தியாவில் அனைத்து மக்கள் தொகை வளர்ச்சியும் குறைந்து கொண்டுதான் வருகிறது. Pew Research Centre நடத்திய ஓர் ஆய்வின்படி 1951இல் ஹிந்துக்களின் ஆண்டு சராசரி மக்கள் தொகை அதிகரிப்பு 20.7 சதவிகிதமாக இருந்தது. 2011இல் 16.7 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதுபோலவே 1951இல் முஸ்லிம்களின் ஆண்டு சராசரி 32.7 சதவிகிதமாக இருந்தது 24.7 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.
ஒரு சமூகத்தில் ஒரு பெண் சராசரியாக எவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார் என்பதை கருத்தரிப்புத் தன்மை விகிதம் என்று கணக்கிடுகிறார்கள். மதவாரியாக கணக்கீடு இதோ:
மதம் 1992 2015
முஸ்லிம் 4.4 2.6
ஹிந்து 3.3 2.1
கிறித்துவர் 2.9 2.0
பவுத்தர் 2.9 1.7
சீக்கியர் 2.4 1.6
ஜெயின் 2.4 1.2
கருத்தரிப்புத் தன்மை ஹிந்து மற்றும் முஸ்லிம்களில் குறைந்து கொண்டே வருகிறது. இருவருக்கும் இடையில் 2015இல் 0.5 புள்ளிகள்தான் வித்தியாசம் இருந்திருக்கிறது. குறைந்து வரும் விகிதத்தைப் பார்த்தால் 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இரு மதங்களும் ஒரே புள்ளியைத் தொடும் சாத்தியம் அதிகம். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் போது அது தெரிய வரும்.
மக்கள் தொகைப் பெருக்கம் இந்நிலையென்றால் பொருளாதார நிலையையும் பார்க்கலாம்.
ஜோதிராவ் ஃபுலே பல்கலைக்கழகம் மற்றும் ஜேஎன்யூ இணைந்து ஜாதி ரீதியாகப் பொருளாதார நிலை குறித்து 2020 ஆம் ஆண்டு ஒரு கணக்கீடு நடத்தியது. ஒவ்வொரு சமூகமும் தேசத்தின் மொத்த செல்வத்தில் எவ்வளவு தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள் என்று இந்த அறிக்கை கணக்கிடுகிறது. அதன்படி,
* முன்னேறிய ஜாதி ஹிந்துக்கள்: 42%
* இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி ஹிந்துக்கள்: 30.7%
* இதர சிறு குறு மதத்தினர்: 9%
* முஸ்லிம்கள்: 8%
* பட்டியலினத்தவர்: 7.6%
* பழங்குடியினர்: 3.7%
(இதர சிறு குறு மதத்தினர் பிரிவில் சீக்கிய, பவுத்த, ஜெயின் மதத்தினர் வருகிறார்கள்.)
உயர்ஜாதியினர் மட்டுமே இந்தியாவின் செல்வங்களில் சுமார் 73%த்தை தங்களிடம் வைத்துக் கொண்டும், மேலும் மேலும் பெருக்கிக் கொண்டும் இருக்கின்றனர். மோடி ஆட்சியே கடந்த 10 ஆண்டுகளில் மேல் தட்டு மக்களுக் கும், கார்ப்பரேட்டுகளுக்கும் அள்ளிக் கொடுத்துள்ளது. ஒட்டு மொத்த தேசத்தின் சொத்துகளை இவ்வளவும் செய்தும் ‘காங்கிரஸ் உங்கள் சொத்துகளை எல்லாம் கொண்டு போகப் போகிறது!’ என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார் பிரதமர் மோடி.
வங்கியில் கடன் வாங்கி செலுத்தாமல் வெளிநாடு தப்பியவர்கள் யார் என்ற பட்டியலைப் பார்த்தாலே மோடி ஆட்சியில் ஆதாயம் அடைந்தவர்கள் யார் என்பது வெளிச்சமாகவே தெரியும்.
புஷ்பேஷ் பெய்ட், ஆஷிஷ், ஜோபன்புத்ரா, விஜய் மல்லையா, சுனய் கல்ரா, சஞ்சய் கல்ரா, சுதிர் குமார் கல்ரா, ஆர்த்தி கல்ரா, வர்ஷா கல்ரா, ஜதின் மேத்தா, உமேஷ் பரேக், கமலேஷ் பரேக், நிலேஷ் பரேக், எகல்வியா கார்க், வினய் மிட்டல், சேட்டன் ஜெயந்திலால் சந்தேசரா, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்திபென் சேட்டன்குமார் சந்தேசரா, நீரவ் மோடி, நிஷால் மோடி(நீரவ் மோடி சகோதரர்), மெகுல் சோக்ஸி (நீரவ் மோடி மாமனார்), சப்யா சேத், ராஜிவ் கோயல், அல்கா கோயல், லலித் மோடி, ரிதேஷ் ஜெயின், ஹிதேஷ் நரேந்திரபாய் படேல், மயூரிபென் படேல், பிரீத்தி ஆஷிஷ் ஜோபன்புத்ரா.
இவர்கள் அத்தனைப் பேரும் குஜராத்காரர்கள் தான் – உயர் தட்டு மக்கள்தான். உண்மை இவ்வாறு இருக்க இன்னொரு மதத்தின்மீது ‘சூ’காட்டுவது நேர்மையானதா? பொது மக்கள் சிந்திப்பார்களாக!
மக்கள் தொகை வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி எத்திசையில்?
Leave a Comment