சென்னை, செப். 14 – காவிரி விவகா ரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான் கடைசி முடிவு என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று (13.9.2023) அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
காவிரி ஒழுங்காற்று குழு கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், இன்னும் 15 நாட்களுக்கு வினா டிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு விட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அது கருநாடக அரசுக்கு தெரிவிக் கப்பட்டது. ஆனால் கருநாடக அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். கருநாடக அரசு நமக்கு பதில் சொல்வதை விட காவிரி ஒழுங் காற்று குழுவுக்கு என்ன பதில் சொல்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
அதன் பிறகு எங்களுக்கு இருக் கும் ஒரு கடைசி முடிவு உச்சநீதி மன்றத்தை அணுகுவதுதான். உச்ச நீதிமன்றத்தில் வருகிற 21-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் கருநாடக அரசின் முடிவு தெளிவாக தெரிந்து விடும். பிறகு அந்த வழக்கில் இதனை இணைத்துக்கொண்டு எங்கள் வழக்குரைஞர்கள் பேசுவார்கள்.
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது பெரிய விஷயம் அல்ல. முதலில் 21ஆம் தேதி வழக்கில் என்ன நிலைமை ஏற்படுகிறது என்பதை பார்த்துவிட்டு அதற்கு பிறகு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது குறித்து யோசிக்கலாம்.
இன்னும் சொல்லப்போனால் உச்சநீதிமன்றமே கருநாடகாவில் போதுமான தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை ஏற்படுத்தலாம்.
உச்சநீதிமன்றம் என்பது கரு நாடக அரசுக்கு மட்டுமல்ல; எங்க ளுக்கும்தான். இந்த காவிரிப் பிரச் சினை எப்போது ஆரம்பித்ததோ அப்போதில் இருந்து இதே பிரச் சினைதான் நீடித்துக் கொண் டிருக்கிறது.
அவர்கள் முதலில் காவிரி நடுவர் மன்றத்தையே ஒப்புக் கொள்ளவில்லை. அதன் பிறகு நடுவர் மன்றத்திற்கு வாதாடி பெற்று வந்தோம். நடுவர் மன்றத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பு கேட்டோம். அதை கொடுக்கக் கூடாது என்றார்கள். அதன் பிறகு உச்சநீதிமன்றம் சென்று அதனை பெற்று வந்தோம்.
அதன் பிறகு ‘கெஜட்டில்’ போடக் கூடாது என்றார்கள். ‘கெஜட்டில்’ போட்ட பிறகு உச்சநீதிமன்றத்திற்கு போனார்கள். எனவே ஒவ்வொரு அங்குலத்திற்கும் கருநாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதை நாங்கள் சந்தித்து தமிழ்நாட்டு மக் களுக்கான உரிமையை பெற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறோம்.
இனியும் பெறுவோம். கருநா டக அரசுடன் தமிழ்நாடு முதல மைச்சர் பேச்சுவார்த்தைக்கு சென் றால் சட்ட ஆயுதத்தை விட்டு விடுகிறோம் என்று அர்த்தமாகும். தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக் காத வண்ணம் எல்லா முயற்சியும் எடுத்து நிச்சயம் நிவாரணத்தை பெற்றுத்தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.