நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயரின் (27.4.1852) பிறந்தநாளான ஏப்ரல் 27 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) முகப்பில் உள்ள அவர்தம் சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்படும்.
தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
வெள்ளுடைவேந்தர் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

Leave a Comment