மதுரை, ஏப். 24- பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க தானியங்கி கதவு அமைப்பது அவசியம் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். கடந்த 10 ஆண்டுகளாக நிலு வையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று (23.4.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கினாலும், மாணவர்கள், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறைய வில்லை. அவர்களை பேருந்து ஓட்டுநர், நடத்துநர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் ஓட்டுநர், நடத்து நர்களை தாக்கும் காட்சிப்பதி வுகளையும் பார்க்க முடிகிறது.
எனவே இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க் கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டு களில் தானியங்கி கதவுகளை பொருத்துவது அவசியம் என அறிவுறுத்தினர்.