மொழிப்போர் தளபதி எல்.ஜி. அவர்களின் 90ஆவது பிறந்த நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் வாழ்த்து

Viduthalai
1 Min Read

திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொழிப்போர் தளபதி எல்.கணேசன் அவர்களின் 90-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24-4-2024) காலை 9 மணி அளவில் தஞ்சாவூர் பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மொழிப்போர் தளபதி எல்.ஜி அவர்களுக்கும் அவரது வாழ்விணையர் கமலாகணேசன் அவர்களுக்கும் பயனடை அணிவித்து இயக்க வெளியீடுகளை அளித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார் அவரது மகன் மாவட்ட திமுக பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மருமகள் ஜெயலட்சுமி, பேத்தி அற்புதா, பேரன் கவுதம் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆசிரியர் அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் அணி மாநில தலைவர் தா.வீரசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் ப.சுப்பிரமணியன், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், திமுக மாவட்ட துணை செயலாளர் பொறியாளர் ந. மணிமாறன் ,திமுக தஞ்சை மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் சதாசிவம், தஞ்சை மாநகராட்சி மண்டல குழு தலைவர் கலையரசன், திமுக பொறுப்பாளர்கள் இரா.ராஜமாணிக்கம், மதுக்கூர் தாண்டவன், கண்ணை மலையப்பன் உள்ளிட்டோரும் எல்.ஜி. அவர்களுக்கு பயனடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *