சென்னை, ஏப். 24- மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள் ளது. மக்களவை தேர்தல் முடிந்து உள்ளதால்.. கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவதற்கான விண்ணப் பங்கள் ஏற்கப்பட உள்ளன.
இந்த திட்டத்தில் கடந்த ஜன வரி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப் பட்டனர். இந்த நிலையில் இந்த மாதம் இதே திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத் தபட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப் பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், கடந்த ஜன வரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 90 சத வீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள் ளார். தேர்தலுக்கு பின் இவர் களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் முதல் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப் பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்த னர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டு வரு கிறது. தேர்தலுக்கு பின் மேலும் சிலருக்கு இந்த திட்டத்தில் பணம் வழங்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பின் புதிதாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளன.
ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், குடும் பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக் கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மானது பெண்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண் ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப் பட்டது. இப்போது 1 கோடியே 7 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப் பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத் தப்பட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 105 மறு வாழ்வு முகாம்களை சேர்ந்தவர்க ளுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப் பட்டு உள்ளது. இதன் மூலம் 19,487 குடும்பங்களில் உள்ள பெண்க ளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத் தபட்டுள்ளது.
ஏற்கெனவே முகாமில் உள்ள குடும்பத் தலைவருக்கு ரூ.1,500, ஏனைய நபர்களுக்கு ரூ.1,000, குழந் தைகளுக்கு ரூ.750 மாதம்தோறும் வழங்கபட்டு வருகிறது. அதில் கூடுதலாக இப்போது இந்த தொகையும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் கூட இது தொடர் பாக பிரச்சாரத்தில் பேசிய அமைச் சர் உதயநிதி ஸ்டாலின், 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தில் கொடுக்க வேண்டும். 1.60 கோடி பேர் விண் ணப்பம் செய்தனர். 1.16 கோடி பேருக்கு இப்போது கொடுக்கிறோம். இதில் பணம் கொடுக்கப்படாமல் போன மற்றவர்களுக்கும் 2-3 மாதத் தில் கொடுப் போம். இப்போது தேர்தல் என்பதால் கடினம். ஆனால் கண்டிப்பாக தேர்தல் முடிந் ததும் பணம் கொடுப் போம். கவலை வேண்டாம், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.