வல்லம், ஏப். 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அர்ஜுன் சிங் நூலகமும் கல்வியியல் துறையும் இணைந்து உலக புத்தக மற்றும் பதிப்பு ரிமை நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா (23.4.2024) நடைபெற் றது. பல்கலைக்கழக துணை வேந்தர் வெ.இராமச்சந்திரன் புத்தகம் நன்கொடை வழங்கும் விழாவினை தொடங்கி வைத் தார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை யர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கூட்டுப் பணி யாளர்கள் மற்றும் மாணவர் கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். துணை வேந் தர் தனது தொடக்கவுரையில் தன்னுடைய தாயார், தான் எட் டாம் வகுப்பு படிக்கும் பொழுது தனக்கு வழங்கிய மு.வரதராஜன் எழுதிய கரித் துண்டு, அகல் விளக்கு ஆகிய புத்தகங்களின் சிறப்பை எடுத் துக்காட்டி புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அன்று முதல் இன்று வரை புத்தகத்தில் தான் கோடிட்டு படிக்கும் பழக் கத்தை கடைப்பிடிப்பதாகவும் கூறி புத்தக வாசிப்பின் முக் கியத் துவத்தை யோசிக்கும் வகையில் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் நூல் வாசிப்பு உறுதிமொழி ஏற்கப் பட்டது. பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் புத்தகங்களை நன்கொடைகளாக வழங்கி னார்கள். புத்தகம் நன் கொடை வழங்கும் நிகழ்வானது 12.4.2024 அன்று தொடங்கி இன்று (24.4.2024) வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த புத்த கங்கள் அரசுப் பள்ளி நூலகங் களுக்கு வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் புத்தக வாசிப் பின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இந்நிகழ்ச்சி சிறப் பாக நடைபெற்றது.
வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கல்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அர்ஜுன் சிங் நூலகம், கல்வியியல் துறை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பெரியார் சமுதாய வானொலி இணைந்து உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை கொண்டாடும் வித மாக பெரியார் கல்வி நிறு வனங்களால் நன்கொடையாக பெற்ற புத்தகங்களை வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் களுக்கு புத்தக நன்கொடை வழங்கும் விழா நேற்று (23.04.2023) வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக அர்ஜுன்சிங் நூலகத்தின் இயக்குனர் த.நர்மதா அனை வரையும் வரவேற்று வரவேற் புரை வழங்கினார். புத்தக நன்கொடை வழங்கும் விழா வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.
புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் உரையை தஞ்சாவூர் மாவட்டத்தின் மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து வழங்கினார். பின்னர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை “வாசிக்கலாம் என்கிறது புத்த கம்” “வாசிக்கலாம் என்கிறது தொழில்நுட்பம்” என்கிற தலைப்பில் நகைச்சுவை கலந்த உரையாக வழங்கினார்கள். தஞ்சை மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பாட புத்தகத்தை மட்டும் படிப்பதோடு மட்டுமல்லாமல் பிற நூல்களைப் படிக்க வேண் டும் என்றும் அதன் மூலம் வாழ்வில் எப்படி வெற்றி பெற லாம் என்ற கருத்தை மாணவர் களுக்கு எடுத்துக் கூறினார்.
500 நன்கொடை புத்தகங் களை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழத்தின் துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் ஆகியோர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக வல்லம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை யாசிரியர் வை.சிவசங்கரி அனை வருக்கும் நன்றி கூறினார்.