செஞ்சி,ஏப்.23- திருமணம் நடந்த இடத்திலேயே குருதிக் கொடை முகாம் நடத்தி மணமக்களும் குருதிக் கொடை வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது.
செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் சிறீகேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த யோகா மருத்துவர் சோனியாவிற்கும் 21.4.2024 அன்று காலை செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத் தில் திருமணம் நடைபெற்றது.
திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே குருதிக் கொடை முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு இணைந்து நடத்திய குருதிக் கொடை முகாம் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி திருமணம் முடிந்தவுடன் 8 மணி அளவில் மணமக்கள் சிறீ கேசவ பிரகாஷ்-சோனியா ஆகியோர் குருதிக் கொடை வழங்கினார்கள்.
இதனைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் குருதிக் கொடை வழங்கினார்கள்.
குருதிக் கொடை வழங்கிய அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. குருதிக் கொடையை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில் திருமண மண்டபத்திலேயே முகாம் நடத்தி மணமக்கள் உள்பட பலர் குருதிக் கொடை வழங்கிய நிகழ்ச்சி இப்பகுதி மக்களால் பெரிதும் பாராட் டப்பட்டது.