சென்னை,ஏப்.23- சென்னை மதுரவாயல் பகுதி சன்னதி தெருவில் ஆக்கிரமித்து கட்டியிருந்த நாகாத்தம்மன் கோயிலை சென்னை உயர்நீதிமன்றம் இடிக்க உத்தரவு பிறப்பித்தது.இதனை அறிந்த இந்து முன்னணி சங்கிகள் அருகில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் பீடம் அமைத்தனர்.
தகவலறிந்த மதுரவாயல் பகுதி திராவிடர் கழக தலைவர் சு.வேல்சாமி கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆலோ சனைப்படி பள்ளி அருகில் கோயில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உடனடியாக மாநகராட்சி மூலம் பீடம் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்து முன்னணியினர் கலவரத்தை உருவாக்க திட்ட மிட்டனர்.செய்தி அறிந்த கழக தோழர்கள் ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் துணைச்செயலாளர் பூவை க.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எ.கண்ணன், தென் சென்னை மாவட்ட கழக துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன்,மதுரவாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி, துணைத் தலைவர் அண்ணா நிசார், அமைப்பாளர் தங்க.சரவணன், தமிழன் காசி,குன்றத்தூர் ஒன்றிய தலைவர் க.பாலமுரளி, பூந்தமல்லி நகர செயலாளர் தி.மணிமாறன், ஒன்றிய செய லாளர் சு.வெங்கடேசன் ஆகி யோர் 21-04-2024 ஞாயிற்றுக் கிழமை மாலை மதுரவாயல் பகுதி காவல் நிலைய ஆய் வாளரை நேரில் சந்தித்து முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் 22-04-2024 திங்கட்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் ஆக்கிர மிப்பு கோயில் இடித்துத் தள்ளப்பட்டது.