2023-2024 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியன் டாலராக இருந்தது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)
இந்த ஆண்டு இது 15 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கருநாடகா வெறும் 4.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை மட்டுமே மேற்கொண்டுள்ளது.
மற்ற மாநிலங்களின் அளவு:
உத்தரப் பிரதேசம் – 3.92 பில்லியன் டாலர்
மகாராட்டிரா – 2.81 பில்லியன் டாலர்
குஜராத் – 2.38 பில்லியன் டாலர்
டில்லி – 1.40 பில்லியன் டாலர்
தமிழ்நாட்டின் ஏற்றுமதி எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 31% ஆகும். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதி 16.48 பில்லியன் டாலர் ஆகும். ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்தஆண்டு முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. 2.81 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் மகாராட்டிரா நான்காவது இடத்தில் உள்ளது. 2.38 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் குஜராத் அய்ந்தாவது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அய்போன் உற்பத்தி இதற்கு முக்கிய காரணம் ஆகும். டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது அய்போன் அசெம்ப்ளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கெனவே முன்மொழியப் பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் அய்போன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப் படுகிறது. உலகிலேயே பெரிய அய்போன் தொழிற் சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.
டாடா குழுமம் ஓசூரில் உள்ள அய்போன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ள தாகக் கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப் பெரிய அய்போன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது.
50,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் இந்த ஆண்டு சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங் களுக்கும் முக்கியமான பல அறி விப்புகள் வெளியிடப்பட்டன. “திராவிட மாடல் அரசு” இந்தியாவுக்கே முன் மாதிரி மாநிலம் (மாடல் ஸ்டேட்) என்பது மேலும் மேலும் உறுதியாகி விட்டது என்பதற்கு இவை எடுத்துக்காட்டே!
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முத்திரை பதித்த தமிழ்நாடு
Leave a Comment