தருமபுரி, செப் 14 – தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் செப்டம்பர் 9 சனிக்கிழமை அன்று தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா நிகழ்வாக அறிவார்ந்த கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
கருத்தரங்கிற்கு பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் நா.அண்ணாதுரை தலைமை வகித்தார். பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செய லாளர் த.மணிவேல் கருத்தரங் கிற்கு வருகை புரிந்தவர்களை வரவேற்று உரையாற்றினார். பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் இர. கிருட்டிணமூர்த்தி பேசுகை யில், கருத்தரங்கை ஏற்பாடு செய்த தனது அனுபவங்களை எடுத்துரைத்தார்.
கருத்தரங்கிற்கு தர்மபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி துணைச் செயலாளர் சாமிநாதன், அரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் தீ.சிவாஜி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் கு.சர வணன், மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மேனாள் பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளரும் பொதுக்குழு உறுப்பினருமான இரா. வேட் ராயன், பொதுக்குழு உறுப்பி னர் க.கதிர், மேனாள் மாவட்ட செயலாளர் பீம.தமிழ் பிரபாக ரன், நகரத் தலைவர் கரு.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
மாநில பொறுப்பாளர்களின் வழிகாட்டல் உரை
பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர் வா.தமிழ் பிர பாகரன் பேசுகையில் சிறப் பானதொரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தோழர்களை பாராட்டி இன்றைய இந்துத்துவா காவிச் சூழலில் இது போன்ற அறி வார்ந்த கருத்தரங்குகள் ஏன் நடத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தையும், இன்றைய ஒன்றிய அரசானது நீட் தேர்வு தொடங்கி ஹிந்தித் திணிப்பு, தமிழ் மொழி நிராகரிப்பு, குலக் கல்வியின் மறு உருவமான விஸ்வகர்மா யோஜனா திட் டம் வரை திட்டமிட்டு தமிழ் நாட்டு மாணவர்களின் கல் வியை பாதிக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப் படுத்த முயல்கின்ற சூழலில் ஆசிரியர்களாகிய நாம் முத லில் இத்திட்டத்தை பற்றிய தெளிவு பெற வேண்டும் என் பதை விளக்கியும் இனி இது போன்ற கருத்தரங்குகள் தமிழ் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் குறைந்தது புதிதாக பத்து ஆசிரியர்களாவது கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்றும் அதற்கான ஆயத்தப் பணியை இன்று முதல் முன் னெடுப்போம் என்று கூறினார்.
பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் ஆசிரி யர் இரா.சிவகுமார் பேசுகை யில், பகுத்தறிவு ஆசிரியர் அணியை தமிழ்நாடு முழுவதும் எப்படி கட்டமைக்க வேண்டும் என்ற திட்டத்தையும் இது போன்ற கருத்தரங்குகள் நடத் துவதன் மூலம் தான் நம்மு டைய இலக்கினை அடைய முடியும் என்றார். பகுத்தறிவு ஆசிரியர் அணியின் புரவலர், தலைவர் மானமிகு.ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில கலந்துரையாடல் தமிழ் நாட்டின் மய்யப் பகுதியில் நடத்த திட்டம் உள்ளது பற்றி யும், அதற்கு தர்மபுரி மாவட் டத்தில் இருந்து பெருமளவில் ஆசிரியர் பெருமக்கள் பங்கு பெற வேண்டும் என்ற கோரிக் கையும் வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் ஆசிரியர் அண்ணா.சரவணன் பேசுகை யில் “தற்போதுள்ள ஒன்றிய அரசானது தன்னுடைய இந் துத்துவா காவிக் கொள்கையை பல்வேறு வழிகளில் கல்வித் துறையில் புகுத்த முயல்கிறது என்பதையும், அதனை ஆசிரி யர்கள் எவ்வாறு அடையாளம் கண்டு அகற்றுவது பற்றிய பார்வை பெற வேண்டும்” என்றும் கூறினார்.
பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர் ஆசிரியர் மாரி.கருணாநிதி அவர்கள் பேசுகையில் “ஆசிரியர்களாகிய நம்மில் சிலரே பகுத்தறிவுக்கு ஒவ்வாத வண்ண கயிறுகளை கையில் கட்டிக்கொண்டு மாணவர்கள் மத்தியில் பாடம் கற்பிக்கின்றார். முதலில் ஆசிரி யர்களாகிய நாம் பகுத்தறிவு பெற்று மூடநம்பிக்கைகள் அற்ற மாணவர் சமுதாயம் படைப்போம்” என்ற உறுதியை ஏற்க வேண்டும் என்றார்.
தலைமை கழகக் காப்பாளர் ஊமை.ஜெயராமன் அவர்கள் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசுகையில் கருத்தரங் கிற்கு வருகை புரிந்த மாநில பொறுப்பாளர்கள், சிறப்பு பேச்சாளர்கள், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட பொறுப்பாளர்கள், வருகை புரிந்துள்ள ஆசிரியர்கள் என அனைவரின் சிறப்புகள் பற்றி யும் தெளிவாக எடுத்துரைத்து பாராட்டினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி பகுத்தறிவு ஆசிரியர் அணி தோழர்களின் இம்முயற்சியை பாராட்டி பய னாடை அணிவித்து மகிழ்ந்தார்.
இரு வேறு தலைப்புகளில் சிறப்பானதொரு கருத்துரை
தந்தை பெரியாரும் – தமிழ் நாட்டு கல்வியும், “கல்வியில் காவி” என்ற இரு வேறு தலைப் புகளில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி அவர்கள் “தந்தை பெரியாரும் தமிழ் நாட்டு கல்வியும்” என்ற தலைப் பில் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை எடுத்துக்காட்டி சிறப்பான உரை நிகழ்த்தினார்.
மன்னர் ஆட்சி காலத்தில் நம் நாட்டு கல்வி முறை எப்படி இருந்தது. நாம் தொடர்ந்து பேசிவரும் மனுதர்மத்தின் மூலம் தான் இன்றும் சர்ச்சை யாக பேசப்படுகின்ற ஸநாத னம் ஆகும்.
மனுதர்மத்தில் “சூத்திரர்கள் படிக்கக் கூடாது. படிப்பதை கேட்டால் காதில் ஈயத்தை காட்சி ஊற்ற வேண்டும். சூத் திரனுக்கு எதைக் கொடுத்தா லும் கல்வியை கொடுக்காதே” என்பது போன்ற கருத்துக்கள் இடம் பெற்று இருந்த மன்னர் கால கல்வி முறை பற்றியும் ஆங்கிலேயர்கள் ஆட்சியிலான மெக்காலே கல்வி முறை பற்றியும் தெளிவாக விளக்கிப் பேசினார்.
சூத்திரர்கள் படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுத் தந்தது
திராவிடர் இயக்கமும் தந்தை பெரியாரும் தான்..!
முந்தைய காலத்தில் நம் முன்னோருக்கு வசதி வாய்ப் பும், பணபலமும் வாய்க்கப் பெற்றிருந்தாலும் பார்ப்பனர் களால் நமக்கு படிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. இன்றைய தெலங்கானா ஆளு நர் தமிழிசையின் கருத்தை மேற்கோள் காட்டி அவருக்கு வசதி வாய்ப்புகள் இருந்திருந் தாலும் அவர் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று தந்தவர் தந்தை பெரியார் என்று விளக் கினார்.
ஆங்கிலேயருக்கு பின் வந்த நீதிக் கட்சியானது படிப்பதற் கான பல்வேறு வாய்ப்புகளை ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கி கல்வியில் ஒரு மாபெ ரும் புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பின் தந்தை பெரியார் அவர் வழியில் வந்த திராவிட தலைவர்கள் ஏற்படுத்திய மாற் றம் தான் தமிழ்நாடு இன்று கல்வியில் முன்னேற்றம் கண்டு நிற்கிறது என்றார். மேலும் ஆசிரியர்களாகிய நாம் தந்தை பெரியார் கருத்துகளை நம்மி டம் பயிலும் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் தூதுவர் களாக அமைதல் வேண்டும். தந்தை பெரியார் வகுத்துத் தந் துள்ள பகுத்தறிவு பாதையைப் போன்ற பாதுகாப்பான பாதை மாணவர்களுக்கு வேறு எங்கும் அமையாது என்றும் பெரியார் கருத்துகளை மாண வர்களுக்கு கொண்டு சேர்த்தல் என்பது அடுத்த தலைமுறைக்கு ஆசிரியர்கள் செய்யும் பெருந் தொண்டு என்றார்.
ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன் அவர்கள் செய லவைத் தலைவர் அறிவுக்கரசு அவர்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது “இந்த தள்ளாத வய திலும் கடலூரிலிருந்து பய ணம் செய்து வருகிறார். அவ ரின் இடது கை கைத்தடியையும், வலது கை தாங்கிய நபரும் இல்லை என்றால் அவரின் நடை நான்கு கால் நடையா கத்தான் அமையும்.! அப்படி ஒரு நிலை இருந்தாலும் தந்தை பெரியாரைப் பற்றி பேச நாளெல்லாம் தான் பிறவா நாட்களே என்று அவர் வாழ்வ தால் தான் இக்கருத்தரங்கிற்கு வந்துள்ளார்” என்று கூறும் போது அனைவரின் கண்களும் பனிந்தன.
அறிவுக்கு ஓவ்வா தேசிய கல்விக்கொள்கை
அறிவுக்கரசு அவர்கள் தனது உரையில், “இந்தியாவில் இதுவரை மூன்று தேசியக் கல்விக் கொள்கைகள் உருவாகி யுள்ளன என்றும் 1996 இல் ழிசிணிஸிஜி உருவாக்கிய கல்விக் கொள்கையில் எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமன் ஆண்டான் என்று குறிப்பிட்டு இருந்தது என்றார். அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து இந்த மனித இனம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆகியுள்ளன என்று நிரூபித்துள்ளனர். அப்படி இருக்கையில் எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமன் எப்படி ஆண்டான் என்ற கேள்விக் கணைகளை கருத்தரங்கில் வீசினார்.
ஆசிரியர் – வாத்தியார் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு
வாத்தியார் என்பதற்கு பொருள் அத்தியாயனம் என்ப தாகும். அதாவது மனப்பாடம் செய்ய பயிற்றுவிப்பவர் தான் வாத்தியார் என்பவர்.
ஆனால் ஆசிரியர் என்பவர் மாணவர்களின் சிந்தனையை தூண்டுபவர்களாக அமைப வர். மாணவர்களை பகுத்தறி வாளர்களாக மாற்ற வேண்டு மென்றால் ஆசிரியர்கள் முத லில் பகுத்தறிவாளர்களாக இருக்க வேண்டும் என்றார். வித்யா மந்திர் என்பதன் பொருள் கூட இந்து தர்ம பாடங்களை கற்பிப்பது என் றாகும் அதனால் தான் அது மந்திர் என்று அழைக்கப்படு கிறது என்று விளக்கினார்.
மேலும் தனது உரையில் மதன் மோகன் மாளவியா, பெரியார் காந்தி உரையாடல், நேரு அவர்கள் காலத்தில் உரு வாக்கப்பட்ட அய்அய்டி நிறு வனம், டல்ஹவுசி காலத்தில் இருந்த கல்வி வாய்ப்புகள் என்று பல அரிய தகவல்களை எடுத்துக் கூறி விளக்கினார்.
தற்போது நிகழும் சர்ச்சை யான ஸநாதனம் என்றால் என்ன என்றும் அந்த ஸநா தனத்தில் கூறப்படும் பாலியல் விவாகம் பற்றியும் அதை சிறப்பு என்று உயர்த்திப் பேசுபவரையும் தமிழ்நாட்டு மக்கள் துச்சமாக நினைத்து தூக்கி எறிய வேண்டும்” என்றார்.
புதிதாக பகுத்தறிவு ஆசிரியர் அணியில் சேர்ந்த ஆசிரியர்களின் கருத்து :
பட்டதாரி ஆசிரியர் அன் பரசு அவர்கள் பேசுகையில் “எந்த குழந்தையும் இந்த மண்ணில் பிறக்கும் பொழுது நாத்திகர்களாகத்தான் பிறக் கின்றனர். பின்னாளில் அவர் களின் குடும்பமும் அவர்கள் வளரும் சூழ்நிலையும் தான் அவர்களை ஆத்திகர்களாக மாற்றுகின்றன. அத்தைய மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களாக நாம் முக்கிய பங்கு வகிக்கின்றோம்.அத்த கைய மாணவர்களை அறிவியல் பார்வை கொண்டு சிந் திக்க தூண்டுமாறு ஆசிரியர் களாகிய நமது கற்பித்தல் அமைய வேண்டும்” என்றார்.
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.சிவப் பிரகாசம் அவர்கள் “தான் இது வரை இது போன்ற திராவிடர் கழக கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற தில்லை என்றாலும் என் வாழ் வில் தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தான் வழிகாட்டியாக கொண்டு வாழ்ந்து வருகின்றேன். இனி தொடர்ந்து பகுத்தறிவு ஆசிரி யர் அணியில் பயணிப்பேன் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி னார்.
தலைமை ஆசிரியர் சிவசங் கர் பேசுகையில் “தான் பணி யாற்றும் பள்ளியில் வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியாரின் கருத்துகளையும், அறிவியல் சார்ந்த விளக்கங் களையும் மாணவர்களுக்கு விளக்கி வருவதாக தன் அனு பவத்தை பகிர்ந்தார். தான் சார்ந்த பகுதியில் இதுபோன்ற பகுத்தறிவு ஆசிரியர் அணி கருத்தரங்குகளை நடத்துவ தாகவும் பெரும்வாரியான ஆசிரியர்களை பகுத்தறிவு ஆசிரியர் அணியில் சேர்க்க முயல்வதாகவும் உறுதியளித் தார்.
புதிதாக வருகை புரிந்த ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பு செய்யப்பட்டு பகுத்த றிவு ஆசிரியர் அணியில் சேர்க் கப்பட்டனர்.
இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் அணி செயலாளர் சே.ஜானகிராமன் நன்றியுரை ஆற்ற சிறப்பான தொரு கருத்தரங்கம் முடிவுற் றது. ஏராளமான அரசு ஊழி யர்கள் மற்றும் புதிய ஆசிரியர் கள் கலந்து கொண்டது குறிப் பிடத்தக்கது.